நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இதுவரை நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல்சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு தாமதமாகினால் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விவசாயிகளுடன் இணைந்து முற்றுகைப் போராட்டம் ஒன்று இடம்பெறும் எனவும் எச்சரித்துள்ளார்.
முல்லைத்தீவு - மாவட்டசெயலகத்தில்இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பெரும்போக நெல்அறுவடை வன்னி உட்பட வடக்கு கிழக்கெங்கும் மும்முரமாக இடம்பெற்றுவரும்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விரைந்து நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு கடந்த 20.01.2026 அன்று பாராளுமன்றில் உரையாற்றியிருந்தேன்.
அதனைத்தொடர்ந்து கடந்த 21.01.2026 அன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவை விரைந்து மேற்கொள்ளுமாறு அமைச்சர் கே.டீ.லால்காந்தவிடம் வலியுறுத்தியிருந்தேன்.
இந்நிலையில் 26.01.2026 திங்கட்கிழமையிலிருந்து நெல்சந்தைப்படுத்தல்சபையினூடாக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென பதில் வழங்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் கடந்த 26ஆம் திகதியன்று நெல்சந்தைப்படுத்தல்சபையினூடாகநெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இருப்பினும் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை.
எனவே எப்போது நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவு இடம்பெறுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் 28ஆம் திகதியிலிருந்து நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளதென முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரால் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அவ்வாறு நெற்கொள்வனவு இடம்பெறவில்லையெனில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நெல் மூட்டைகள் ஏற்றப்பட்ட உழவியந்திரங்களை நிறுத்தி விவசாயிகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
அந்த நிலையை ஏற்படுத்தாமல் இனியும் தாமதிக்காமல் 28ஆம் திகதியே நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.
நெற்கொள்வனவு தாமதமாகினால் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ரவிகரன் எம்.பி எச்சரிக்கை நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இதுவரை நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல்சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு தாமதமாகினால் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விவசாயிகளுடன் இணைந்து முற்றுகைப் போராட்டம் ஒன்று இடம்பெறும் எனவும் எச்சரித்துள்ளார்.முல்லைத்தீவு - மாவட்டசெயலகத்தில்இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,பெரும்போக நெல்அறுவடை வன்னி உட்பட வடக்கு கிழக்கெங்கும் மும்முரமாக இடம்பெற்றுவரும்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விரைந்து நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு கடந்த 20.01.2026 அன்று பாராளுமன்றில் உரையாற்றியிருந்தேன்.அதனைத்தொடர்ந்து கடந்த 21.01.2026 அன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவை விரைந்து மேற்கொள்ளுமாறு அமைச்சர் கே.டீ.லால்காந்தவிடம் வலியுறுத்தியிருந்தேன்.இந்நிலையில் 26.01.2026 திங்கட்கிழமையிலிருந்து நெல்சந்தைப்படுத்தல்சபையினூடாக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென பதில் வழங்கப்பட்டிருந்தது.அந்தவகையில் கடந்த 26ஆம் திகதியன்று நெல்சந்தைப்படுத்தல்சபையினூடாகநெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இருப்பினும் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை.எனவே எப்போது நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவு இடம்பெறுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.இந்நிலையில் 28ஆம் திகதியிலிருந்து நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளதென முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரால் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,அவ்வாறு நெற்கொள்வனவு இடம்பெறவில்லையெனில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நெல் மூட்டைகள் ஏற்றப்பட்ட உழவியந்திரங்களை நிறுத்தி விவசாயிகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.அந்த நிலையை ஏற்படுத்தாமல் இனியும் தாமதிக்காமல் 28ஆம் திகதியே நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.