• Jan 28 2026

நிலக்கரி சர்ச்சை; சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தண்டப்பணம்! அமைச்சர் விளக்கம்

Chithra / Jan 27th 2026, 8:19 pm
image


முன்னைய ஆண்டுகளிலும் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

இன்று  அமைச்சரவைத் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​பிரச்சினைக்குரிய நிலக்கரி காரணமாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

முதலாவது தொகுதியாக வந்த 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியிலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. அதன் மாதிரியைப் பரிசோதித்தபோது 5,520 கிலோ கலோரி வெப்ப வலுவே இருந்தது. அதற்கமைய அந்த நிறுவனத்திற்கு இரட்டிப்புத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது தொகுதியில் 6,017 கிலோ கலோரி இருந்தது. அது 5900 - 6150 என்ற எல்லைக்குள் உள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது தொகுதிகள் தற்போது தரையிறக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னரே அவற்றை ஏற்க வேண்டுமா எனத் தீர்மானிக்கப்படும். 

இவ்வாறான சம்பவங்கள் முன்னரும் பலமுறை பதிவாகியுள்ளன. 2020-2021 காலப்பகுதியில் இதேபோன்று 7.54 மில்லியன் டொலர்களை நாம் தண்டப்பணமாக அறவிட்டுள்ளோம். 2021-2022 இல் 6.1 மில்லியன் டொலரும், 2022-2023 ஆண்டுகளில் 7.8 மில்லியன் டொலரும் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது. 

அதாவது, நிலக்கரியைக் கொண்டுவரும்போது தரத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்படும். பாவனைக்கு உதவாது என்றால் அது நிராகரிக்கப்படும். இப்படித்தான் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இது ஒன்றும் பெரிய அதிசயமான விடயமல்ல. 

நிலக்கரியை ஏற்றும் துறைமுகத்தில் பரிசோதனை அறிக்கை தரத்திற்கு அமைவாக இருந்து, இலங்கையில் தரையிறக்கிய பின்னர் பிரச்சினை இருந்தால் தண்டப்பணம் விதிக்கப்படும். தரமற்ற சில தொகுதிகள் சிக்கியதால் 2020, 2021, 2022, 2023 ஆண்டுகளிலும் இவ்வாறே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதற்காக 10 கப்பல்கள் கொண்டு வந்தால் 10 இலும் பிரச்சினை உள்ளது என்று அர்த்தமல்ல. சில தொகுதிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு நிலக்கரி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறைமை உள்ளது, என்று தெரிவித்தார்.

நிலக்கரி சர்ச்சை; சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தண்டப்பணம் அமைச்சர் விளக்கம் முன்னைய ஆண்டுகளிலும் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று  அமைச்சரவைத் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​பிரச்சினைக்குரிய நிலக்கரி காரணமாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,முதலாவது தொகுதியாக வந்த 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியிலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. அதன் மாதிரியைப் பரிசோதித்தபோது 5,520 கிலோ கலோரி வெப்ப வலுவே இருந்தது. அதற்கமைய அந்த நிறுவனத்திற்கு இரட்டிப்புத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தொகுதியில் 6,017 கிலோ கலோரி இருந்தது. அது 5900 - 6150 என்ற எல்லைக்குள் உள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது தொகுதிகள் தற்போது தரையிறக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னரே அவற்றை ஏற்க வேண்டுமா எனத் தீர்மானிக்கப்படும். இவ்வாறான சம்பவங்கள் முன்னரும் பலமுறை பதிவாகியுள்ளன. 2020-2021 காலப்பகுதியில் இதேபோன்று 7.54 மில்லியன் டொலர்களை நாம் தண்டப்பணமாக அறவிட்டுள்ளோம். 2021-2022 இல் 6.1 மில்லியன் டொலரும், 2022-2023 ஆண்டுகளில் 7.8 மில்லியன் டொலரும் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது. அதாவது, நிலக்கரியைக் கொண்டுவரும்போது தரத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்படும். பாவனைக்கு உதவாது என்றால் அது நிராகரிக்கப்படும். இப்படித்தான் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இது ஒன்றும் பெரிய அதிசயமான விடயமல்ல. நிலக்கரியை ஏற்றும் துறைமுகத்தில் பரிசோதனை அறிக்கை தரத்திற்கு அமைவாக இருந்து, இலங்கையில் தரையிறக்கிய பின்னர் பிரச்சினை இருந்தால் தண்டப்பணம் விதிக்கப்படும். தரமற்ற சில தொகுதிகள் சிக்கியதால் 2020, 2021, 2022, 2023 ஆண்டுகளிலும் இவ்வாறே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக 10 கப்பல்கள் கொண்டு வந்தால் 10 இலும் பிரச்சினை உள்ளது என்று அர்த்தமல்ல. சில தொகுதிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு நிலக்கரி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறைமை உள்ளது, என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement