திருவனந்தபுரம் விளப்பில்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த அலட்சியச் சம்பவம், கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட 33 வயதான பிஸ்மீர் என்பவரை அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனை ஹாலில் உயிருக்கு போராடிய கணவருக்காக சிகிச்சை அளிக்குமாறு அந்த பெண் அங்குமிங்கும் ஓடி கெஞ்சியபோதும், அங்கு பணியிலிருந்த வைத்தியர்களும் தாதியர்களும் அலட்சியமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் அழுது மன்றாடிய பின்னரும், முதலுதவி சிகிச்சை கூட அளிக்கப்படவில்லை என்றும், பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிஸ்மீரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்ட அவரது மனைவி செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சிலர் மனசாட்சியே இல்லாமல் நடந்துகொண்டதன் விளைவாக, ஒரு பெண் விதவையாக்கப்பட்டதும், இரண்டு குழந்தைகள் அநாதையாக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை உருவாக்கியுள்ளது.
https://www.facebook.com/share/v/1DtKoa4U4T/
மருத்துவமனை அலட்சியத்தினால் பறிபோன உயிர் திருவனந்தபுரம் விளப்பில்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த அலட்சியச் சம்பவம், கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட 33 வயதான பிஸ்மீர் என்பவரை அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.மருத்துவமனை ஹாலில் உயிருக்கு போராடிய கணவருக்காக சிகிச்சை அளிக்குமாறு அந்த பெண் அங்குமிங்கும் ஓடி கெஞ்சியபோதும், அங்கு பணியிலிருந்த வைத்தியர்களும் தாதியர்களும் அலட்சியமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 20 நிமிடங்கள் அழுது மன்றாடிய பின்னரும், முதலுதவி சிகிச்சை கூட அளிக்கப்படவில்லை என்றும், பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிஸ்மீரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட அவரது மனைவி செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சிலர் மனசாட்சியே இல்லாமல் நடந்துகொண்டதன் விளைவாக, ஒரு பெண் விதவையாக்கப்பட்டதும், இரண்டு குழந்தைகள் அநாதையாக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை உருவாக்கியுள்ளது.https://www.facebook.com/share/v/1DtKoa4U4T/