ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட 45 வினாடிகளில் தலைகீழாகக் கவிழ்ந்து தனியார் ஜெட் விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தின் பேங்கர் சர்வதேச விமானநிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறித்த தனியார் ஜெட் விமானம் புறப்பட தயாராகவிருந்தது.
ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட அடுத்த 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்து தீப்பற்றியது.
இந்தக் கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த வேளையில் அந்தப் பகுதியில் மிகக் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருந்தது. மோசமான வானிலையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
குறித்த விபத்தையடுத்து பேங்கர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புறப்பட்ட 45 வினாடிகளில் தலைகீழாக கவிழ்ந்த விமானம்; தீப்பற்றி எரிந்ததில் 7பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட 45 வினாடிகளில் தலைகீழாகக் கவிழ்ந்து தனியார் ஜெட் விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தின் பேங்கர் சர்வதேச விமானநிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறித்த தனியார் ஜெட் விமானம் புறப்பட தயாராகவிருந்தது. ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட அடுத்த 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்து தீப்பற்றியது. இந்தக் கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த வேளையில் அந்தப் பகுதியில் மிகக் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருந்தது. மோசமான வானிலையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. குறித்த விபத்தையடுத்து பேங்கர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.