மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்றுவதற்கான புதிய சட்டம் மற்றும் அதிகாரசபை நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பளை, தொரகல - பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் மதத்தலங்களை புரைமைக்குத் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன.
அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாக ஆரம்பித்து அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கிராமப்புறத்தின் வறுமையை ஒழிப்பதற்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் தற்போது அதிக பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வரலாற்றில் முதன் முறையாக, எதிர்வரும் பெப்ரவரி மாதம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபாய் நாளாந்த வேதனத்தை பெறுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய சட்டம், அதிகார சபை ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்றுவதற்கான புதிய சட்டம் மற்றும் அதிகாரசபை நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பளை, தொரகல - பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் மதத்தலங்களை புரைமைக்குத் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன. அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாக ஆரம்பித்து அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கிராமப்புறத்தின் வறுமையை ஒழிப்பதற்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் தற்போது அதிக பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வரலாற்றில் முதன் முறையாக, எதிர்வரும் பெப்ரவரி மாதம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபாய் நாளாந்த வேதனத்தை பெறுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.