'சண்ட்ரா' (Chandra) என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, பிரித்தானியாவை இன்று தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் இந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு சூறாவளிகள் ஏற்கனவே தாக்கியுள்ளன.
இந்தநிலையில், மூன்றாவது பெரிய சூறாவளியாக கருதப்படும் 'சண்ட்ரா', இன்று பிரித்தானியாவை தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வட அயர்லாந்தின் கிழக்கு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் காற்றின் வேகம், மணிக்கு 120 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் பாரிய அலைகள் எழ வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மற்றும் வடக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகளிலும், ஸ்கொட்லாந்திலும் பலத்த பனி மழை பெய்யும் எனவும் பிரித்தானிய வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
பிரித்தானியாவை இன்று தாக்கும் 'சண்ட்ரா' சூறாவளி 'சண்ட்ரா' (Chandra) என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, பிரித்தானியாவை இன்று தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவில் இந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு சூறாவளிகள் ஏற்கனவே தாக்கியுள்ளன.இந்தநிலையில், மூன்றாவது பெரிய சூறாவளியாக கருதப்படும் 'சண்ட்ரா', இன்று பிரித்தானியாவை தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வட அயர்லாந்தின் கிழக்கு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் காற்றின் வேகம், மணிக்கு 120 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் பாரிய அலைகள் எழ வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை, மத்திய மற்றும் வடக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகளிலும், ஸ்கொட்லாந்திலும் பலத்த பனி மழை பெய்யும் எனவும் பிரித்தானிய வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.