• Jan 28 2026

குளவி கொட்டுக்கு இலக்காகி அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு!

dileesiya / Jan 27th 2026, 5:52 pm
image

மாங்குளத்தில் குளவி கொட்டியதில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 03 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் பாடசாலை விட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் பழைய கொலணி பகுதியில் குளவி கூடு கலைந்து வீதியால் சென்றவர்களை குளவிகள் தாக்கின. 


இதில் துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆரம்ப பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்ரனி ஜோர்ஜ் என்ற அரச உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


மேலும் 03 பாடசாலை மாணவர்கள் குளவிக் கொட்டிற்கு இலக்கான நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகி அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு மாங்குளத்தில் குளவி கொட்டியதில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 03 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் பாடசாலை விட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் பழைய கொலணி பகுதியில் குளவி கூடு கலைந்து வீதியால் சென்றவர்களை குளவிகள் தாக்கின. இதில் துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆரம்ப பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்ரனி ஜோர்ஜ் என்ற அரச உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.மேலும் 03 பாடசாலை மாணவர்கள் குளவிக் கொட்டிற்கு இலக்கான நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement