தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தன் உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்த விடுதலையாளர் முத்துக்குமாரசுவாமி காலமாகிவிட்டார்.
முத்துக்குமாரசுவாமி காலமாகியதை முன்னிட்டு அவருக்கு வீரவணக்கத்தை செலுத்தும் முகமாக ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அஞ்சலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அஞ்சலி அறிக்கையில் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தன் உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்த தம்பி குமார் மறைந்தார். ஈழத்தமிழ் மக்கள் பெருமை கொள்ள வேண்டிய ஈடு இணையற்ற உலக அரசியல் மேதை. வெளிச்சத்துக்கு வராத வெளிச்சம்.அமைதியாக இருந்து அவர் ஆற்றிய அரிய பணியை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிவர். திரும்பிப் பார்க்கிறேன்.
மாணவர் அமைப்பை உருவாக்கி அறப்போர்க் களத்தில் நான் தலை நிமிர்ந்த நாளி குமாரின் தந்தையார் தம்பித்துரை அவர்கள் மட்டு நகரில் நீதிபதியாக இருந்தார். அறப்போரில் ஈடுபட்ட தமிழ்ப் பெண்கள் ஊர்வலம் போனபோது மட்டுநகர் காவல் நிலையத்தில் இருந்த சிங்கள இனவெறிக் காவலர்கள் தங்கள் ஆடைகளை அகற்றிவிட்டு ஊர்வலம் போன பெண்கள் முன்னால் அம்மணமாக நின்று கூச்சலிட்டார்கள்.
மட்டுநகர் காவல் துறையின் சிங்கள உயர் அதிகாரிகளை அழைத்து நீதிபதி தம்பித்துரை அவர்கள், " இன்னும் ஒருமுறை நீங்கள் இவ்வாறு நடந்தால் உங்களை நான் மன்னிக்க மாட்டேன்!" என்று எச்சரித்தார். தமிழீழத்தில் அறப்போர் நெருப்பு வெடித்தெழுந்த இக்காலச் சூழலில்தான் மட்டுநகரில் கல்லூரி மாணவனாகப் பயின்று கொண்டிருந்த தம்பித்துரை நீதிபதியின் மகன் தம்பி குமார் தமிழீழ உணர்வாளனாய், விடுதலையாளனாய் உருவானார்.
1972 இல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தள்ளப்பட்ட முதல் தமிழீழப் போராளியாய் நான் இருந்தேன். நான் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு ஒரு மாத கால இடைவெளியின்
பின் தம்பி குமாரையும் ஆணவம் பிடித்த சிங்கள உளவுத்துறையினர் அதே சிறைச்சாலையில் தள்ளினார்கள். வெலிக்கடைச் சிறைச்சாலையில் உசாவலோ வழக்கோ இன்றிச் சில ஆண்டுகள் கழிந்த நிலையில் விடுதலை வேண்டிச் சாகும் வரை உண்ணாநோன்பு இருப்பதென நானும் சிறைச்சாலை நண்பர்களும் முடிவு செய்தோம்.
சிதறடித்து இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் எங்களைத் தள்ளுவதென்று சிங்கள அரசு தீர்மானித்தது. அந்த நள்ளிரவு என் நெஞ்சில் அப்படியே பதிந்திருக்கிறது. என்னுடைய வலது கையையும் குமாரின் இடது கையையும் ஒரே விலங்கால் பிணைத்து - சிறைச்சாலை வண்டியில் எங்கள் இருவரையும் தள்ளினார்கள். எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இருள் சூழ்ந்த நீண்ட நேர இரவுப்பயணத்தின் பின் என்னை மாத்தறை சிறைச்சாலையிலும், குமாரை தங்காலை சிறைச்சாலையிலும் அடைத்தார்கள்.
என் இனிய தம்பி குமாரின் விடுதலைப் போராட்ட வாழ்வைப் பற்றி இப்படி எழுதிக்கொண்டே இருக்கலாம். சிறைச்சாலையில் இருந்த 42 போராளிகளில் எவரும் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. குமார் சட்டப்படிப்பை சிறைச்சாலையில் இருக்கும் போதே படித்து நிறைவு செய்தார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த குமாரைச் சிங்கள இனவெறி அரசின் உளவுத்துறையும் படைப்பிரிவுகளும் வெறி கொண்டுத் தேடத் தலைமறைவாகி அமெரிக்காவை சென்றடைந்தார் குமார்.
தலை சிறந்த அரசியல் மேதையாகத் தலை நிமிர்ந்தார் குமார். மனித உரிமை நோக்கில் அவர் பயணம் புரிந்த ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளுக்களில் அவர் சந்தித்த உலக அரசியல் தலைவர்கள் அனைவரிடமும் இலங்கையில் நிகழும் மனித உரிமை மீறல்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார்.
திமோர் தெற்கு சூடான் போன்ற நாடுகளில் நிகழ்ந்த விடுதலை குறித்த கருத்துக் கணிப்புக்களில் எல்லாம் அவர் கலந்து கொண்டார்.தமிழீழ விடுதலை குறித்த கருத்துக் கணிப்பு ஒன்றை இலங்கையில் நடத்துவதன் மூலமே ஈழத்தமிழர்கள் தங்கள் விடுதலையைப் பெற முடியும் என்பதில் இறுதி மூச்சுவரை தளராத நம்பிக்கை கொண்டிருந்தார் குமார். வீறுகொண்ட ஈழ விடுதலையாளர் குமார் விடைபெற்றார். வீர வணக்கம் செலுத்துவோம். என்று தனது உரையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அறப்போர் காலத்தின் ஆரம்ப போராளி குமாரின் மறைவு ஈழமக்களுக்கு பாரிய இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தன் உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்த விடுதலையாளர் முத்துக்குமாரசுவாமி காலமாகிவிட்டார். முத்துக்குமாரசுவாமி காலமாகியதை முன்னிட்டு அவருக்கு வீரவணக்கத்தை செலுத்தும் முகமாக ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அஞ்சலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அஞ்சலி அறிக்கையில் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தன் உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்த தம்பி குமார் மறைந்தார். ஈழத்தமிழ் மக்கள் பெருமை கொள்ள வேண்டிய ஈடு இணையற்ற உலக அரசியல் மேதை. வெளிச்சத்துக்கு வராத வெளிச்சம்.அமைதியாக இருந்து அவர் ஆற்றிய அரிய பணியை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிவர். திரும்பிப் பார்க்கிறேன்.மாணவர் அமைப்பை உருவாக்கி அறப்போர்க் களத்தில் நான் தலை நிமிர்ந்த நாளி குமாரின் தந்தையார் தம்பித்துரை அவர்கள் மட்டு நகரில் நீதிபதியாக இருந்தார். அறப்போரில் ஈடுபட்ட தமிழ்ப் பெண்கள் ஊர்வலம் போனபோது மட்டுநகர் காவல் நிலையத்தில் இருந்த சிங்கள இனவெறிக் காவலர்கள் தங்கள் ஆடைகளை அகற்றிவிட்டு ஊர்வலம் போன பெண்கள் முன்னால் அம்மணமாக நின்று கூச்சலிட்டார்கள்.மட்டுநகர் காவல் துறையின் சிங்கள உயர் அதிகாரிகளை அழைத்து நீதிபதி தம்பித்துரை அவர்கள், " இன்னும் ஒருமுறை நீங்கள் இவ்வாறு நடந்தால் உங்களை நான் மன்னிக்க மாட்டேன்" என்று எச்சரித்தார். தமிழீழத்தில் அறப்போர் நெருப்பு வெடித்தெழுந்த இக்காலச் சூழலில்தான் மட்டுநகரில் கல்லூரி மாணவனாகப் பயின்று கொண்டிருந்த தம்பித்துரை நீதிபதியின் மகன் தம்பி குமார் தமிழீழ உணர்வாளனாய், விடுதலையாளனாய் உருவானார்.1972 இல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தள்ளப்பட்ட முதல் தமிழீழப் போராளியாய் நான் இருந்தேன். நான் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு ஒரு மாத கால இடைவெளியின்பின் தம்பி குமாரையும் ஆணவம் பிடித்த சிங்கள உளவுத்துறையினர் அதே சிறைச்சாலையில் தள்ளினார்கள். வெலிக்கடைச் சிறைச்சாலையில் உசாவலோ வழக்கோ இன்றிச் சில ஆண்டுகள் கழிந்த நிலையில் விடுதலை வேண்டிச் சாகும் வரை உண்ணாநோன்பு இருப்பதென நானும் சிறைச்சாலை நண்பர்களும் முடிவு செய்தோம்.சிதறடித்து இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் எங்களைத் தள்ளுவதென்று சிங்கள அரசு தீர்மானித்தது. அந்த நள்ளிரவு என் நெஞ்சில் அப்படியே பதிந்திருக்கிறது. என்னுடைய வலது கையையும் குமாரின் இடது கையையும் ஒரே விலங்கால் பிணைத்து - சிறைச்சாலை வண்டியில் எங்கள் இருவரையும் தள்ளினார்கள். எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இருள் சூழ்ந்த நீண்ட நேர இரவுப்பயணத்தின் பின் என்னை மாத்தறை சிறைச்சாலையிலும், குமாரை தங்காலை சிறைச்சாலையிலும் அடைத்தார்கள்.என் இனிய தம்பி குமாரின் விடுதலைப் போராட்ட வாழ்வைப் பற்றி இப்படி எழுதிக்கொண்டே இருக்கலாம். சிறைச்சாலையில் இருந்த 42 போராளிகளில் எவரும் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. குமார் சட்டப்படிப்பை சிறைச்சாலையில் இருக்கும் போதே படித்து நிறைவு செய்தார்.வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த குமாரைச் சிங்கள இனவெறி அரசின் உளவுத்துறையும் படைப்பிரிவுகளும் வெறி கொண்டுத் தேடத் தலைமறைவாகி அமெரிக்காவை சென்றடைந்தார் குமார்.தலை சிறந்த அரசியல் மேதையாகத் தலை நிமிர்ந்தார் குமார். மனித உரிமை நோக்கில் அவர் பயணம் புரிந்த ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளுக்களில் அவர் சந்தித்த உலக அரசியல் தலைவர்கள் அனைவரிடமும் இலங்கையில் நிகழும் மனித உரிமை மீறல்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார்.திமோர் தெற்கு சூடான் போன்ற நாடுகளில் நிகழ்ந்த விடுதலை குறித்த கருத்துக் கணிப்புக்களில் எல்லாம் அவர் கலந்து கொண்டார்.தமிழீழ விடுதலை குறித்த கருத்துக் கணிப்பு ஒன்றை இலங்கையில் நடத்துவதன் மூலமே ஈழத்தமிழர்கள் தங்கள் விடுதலையைப் பெற முடியும் என்பதில் இறுதி மூச்சுவரை தளராத நம்பிக்கை கொண்டிருந்தார் குமார். வீறுகொண்ட ஈழ விடுதலையாளர் குமார் விடைபெற்றார். வீர வணக்கம் செலுத்துவோம். என்று தனது உரையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.