• Jan 28 2026

மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு !

dileesiya / Jan 27th 2026, 3:36 pm
image

40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் நேரடித்தலையீட்டில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பார் அற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டதுடன்,இதனால் இப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம் கூறியதையடுத்து இவ் வீதியினை JCB இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடப்பட்டுள்ளது.


இதன் போது பொது மக்கள் தவிசாளரின் இந்த செயற்பாட்டிற்கு நன்றியையும் தெரிவித்தனர். 


150 மேற்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்த இந்த பாதை இன்று திறக்கப்பட்டது. 


விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகின்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு 40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் நேரடித்தலையீட்டில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பார் அற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டதுடன்,இதனால் இப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம் கூறியதையடுத்து இவ் வீதியினை JCB இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடப்பட்டுள்ளது.இதன் போது பொது மக்கள் தவிசாளரின் இந்த செயற்பாட்டிற்கு நன்றியையும் தெரிவித்தனர். 150 மேற்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்த இந்த பாதை இன்று திறக்கப்பட்டது. விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகின்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement