• May 08 2024

வெறும் 12 வயதில் 5 டிகிரி பெற்று சாதனை...! 6 ஆவது டிகிரிக்கு ஸ்கெச் போடும் சிறுவன்..!samugammedia

Sharmi / May 28th 2023, 12:03 pm
image

Advertisement

சிறுவன் ஒருவன் 12 வயதில்  ஐந்து டிகிரி பெற்று சாதனை படைத்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

க்ளோவிஸ் ஹங் என்ற சிறுவனே அமெரிக்காவின் புல்லர்டன் கல்லூரியில், மிகவும் இளம் வயதில் பட்டதாரியாகி சாதனை படைத்துள்ளார்.



க்ளோவிஸ் ஹங், ஐந்து அசோசியேட் பட்டங்களை பெற்றுள்ளார். அது மட்டுமன்றி, ஆறாவது பட்டத்தை அடுத்த ஆண்டு பெற்றுக் கொள்வதற்கும்  அவர் திட்டமிட்டுள்ளார்.

வரலாறு, சமூக அறிவியல், சமூக நடத்தை மற்றும் சுய வளர்ச்சி, கலை மற்றும் மனித வெளிப்பாடு, மற்றும் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய ஐந்து துறைகளிலுமே  அவர் பட்டம் பெற்றுள்ளார்.

இது குறித்து அவரது தாயார், சாங் சோய் , ஹங் எப்போதும் தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டே, இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி செல்பவர்.

இதனால் தான் அவரை கடந்த 2019 இல் பள்ளியிலிருந்து நீக்கி, வீட்டில் இருந்து படிக்க வைக்க முடிந்தது எனவும், பள்ளி கல்வி முறை அவரின் ஆர்வத்திற்கு  போதுமானதாக இல்லை, எனவே, கல்லூரி அவருக்கு சிறந்த தேர்வாக இருந்தது என்றும்  ஹங்கின் தாயார் தெரிவித்துள்ளார்.



வெறும் 12 வயதில் 5 டிகிரி பெற்று சாதனை. 6 ஆவது டிகிரிக்கு ஸ்கெச் போடும் சிறுவன்.samugammedia சிறுவன் ஒருவன் 12 வயதில்  ஐந்து டிகிரி பெற்று சாதனை படைத்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. க்ளோவிஸ் ஹங் என்ற சிறுவனே அமெரிக்காவின் புல்லர்டன் கல்லூரியில், மிகவும் இளம் வயதில் பட்டதாரியாகி சாதனை படைத்துள்ளார்.க்ளோவிஸ் ஹங், ஐந்து அசோசியேட் பட்டங்களை பெற்றுள்ளார். அது மட்டுமன்றி, ஆறாவது பட்டத்தை அடுத்த ஆண்டு பெற்றுக் கொள்வதற்கும்  அவர் திட்டமிட்டுள்ளார். வரலாறு, சமூக அறிவியல், சமூக நடத்தை மற்றும் சுய வளர்ச்சி, கலை மற்றும் மனித வெளிப்பாடு, மற்றும் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய ஐந்து துறைகளிலுமே  அவர் பட்டம் பெற்றுள்ளார்.இது குறித்து அவரது தாயார், சாங் சோய் , ஹங் எப்போதும் தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டே, இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி செல்பவர்.இதனால் தான் அவரை கடந்த 2019 இல் பள்ளியிலிருந்து நீக்கி, வீட்டில் இருந்து படிக்க வைக்க முடிந்தது எனவும், பள்ளி கல்வி முறை அவரின் ஆர்வத்திற்கு  போதுமானதாக இல்லை, எனவே, கல்லூரி அவருக்கு சிறந்த தேர்வாக இருந்தது என்றும்  ஹங்கின் தாயார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement