• May 19 2024

பேருவளையில் உருவாகும் பாரிய குப்பை மேடு...! மக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல்...! சபையில் எதிர்க்கட்சி எம்.பி எச்சரிக்கை...!

Sharmi / May 8th 2024, 1:38 pm
image

Advertisement

பேருவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கழிவுகள் மத்தவிராஜ தோட்டத்தில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வருவதன் காரணமாக அங்கு பாரிய குப்பை மேடு உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

இன்றைய(08)  பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பேருவளை பகுதியில் வாழும் 450 குடும்பங்களில் வாழும் மக்கள், குறித்த குப்பை மேட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேவேளை, இந்த குப்பை மேட்டினால் மீதொட்டமுல்லயில் நடந்ததைப் போன்று உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனவும் பக்கீர் மார்க்கர் தெரிவித்தார்.

அதேவேளை , குறைந்த வருமானம் கொண்ட மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே இந்தக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

பேருவளை, களுத்துறை பிரதேச செயலகப் பிரிவுகளின் சுகாதாரத் துறையின் பொறுப்பு மாகாண சபைக்கு இல்லை, அது நேரடியாக மத்திய அரசாங்கத்திற்கே உள்ளது. 

பேருவளை குப்பை மேட்டை அகற்றி, கழிவுகளை அகற்றுவதற்கு நிலையான தீர்வை வழங்க சுகாதார, சுற்றாடல், உள்ளூராட்சி அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் அழைக்க வேண்டும் எனவும்  பக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.

பேருவளையில் உருவாகும் பாரிய குப்பை மேடு. மக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல். சபையில் எதிர்க்கட்சி எம்.பி எச்சரிக்கை. பேருவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கழிவுகள் மத்தவிராஜ தோட்டத்தில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வருவதன் காரணமாக அங்கு பாரிய குப்பை மேடு உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.இன்றைய(08)  பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.பேருவளை பகுதியில் வாழும் 450 குடும்பங்களில் வாழும் மக்கள், குறித்த குப்பை மேட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதேவேளை, இந்த குப்பை மேட்டினால் மீதொட்டமுல்லயில் நடந்ததைப் போன்று உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனவும் பக்கீர் மார்க்கர் தெரிவித்தார்.அதேவேளை , குறைந்த வருமானம் கொண்ட மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே இந்தக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.பேருவளை, களுத்துறை பிரதேச செயலகப் பிரிவுகளின் சுகாதாரத் துறையின் பொறுப்பு மாகாண சபைக்கு இல்லை, அது நேரடியாக மத்திய அரசாங்கத்திற்கே உள்ளது. பேருவளை குப்பை மேட்டை அகற்றி, கழிவுகளை அகற்றுவதற்கு நிலையான தீர்வை வழங்க சுகாதார, சுற்றாடல், உள்ளூராட்சி அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் அழைக்க வேண்டும் எனவும்  பக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement