• Dec 17 2024

மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவராதவாறு செயற்படுங்கள் - சபையில் எச்சரித்த எதிர்க்கட்சித் தலைவர்

Chithra / Dec 17th 2024, 2:29 pm
image



மீண்டும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

சட்டமன்றத்தின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு, மக்களுக்கு  உகந்த சேவையை வழங்குவதில் சபாநாயகருக்கு தனித்துவமான வகிபங்கு உண்டு. 

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தரமான அரச சேவையை வழங்குவதில் சபாநாயகரின் பாத்திரம் தனித்துவமானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சகல உறுப்பினர்களினதும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வேறுபாடின்றி கேட்பதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காளராக சபாநாயகர் மாறுகிறார். 

முன்னாள் சபாநாயகரைப் போன்று நடந்து கொள்ளாது பணியை சிறப்பாக முன்னெடுக்குமாறும், மீண்டும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


இதேவேளை 10ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள  கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் சபையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் சகல கட்சிகளையும், அனைத்து உறுப்பினர்களையும் சமமாக மதித்து, அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாத்து, நேர்மையாகச் செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, உங்களை வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவராதவாறு செயற்படுங்கள் - சபையில் எச்சரித்த எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் சட்டமன்றத்தின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு, மக்களுக்கு  உகந்த சேவையை வழங்குவதில் சபாநாயகருக்கு தனித்துவமான வகிபங்கு உண்டு. 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தரமான அரச சேவையை வழங்குவதில் சபாநாயகரின் பாத்திரம் தனித்துவமானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.சகல உறுப்பினர்களினதும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வேறுபாடின்றி கேட்பதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காளராக சபாநாயகர் மாறுகிறார். முன்னாள் சபாநாயகரைப் போன்று நடந்து கொள்ளாது பணியை சிறப்பாக முன்னெடுக்குமாறும், மீண்டும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இதேவேளை 10ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள  கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் சபையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் சகல கட்சிகளையும், அனைத்து உறுப்பினர்களையும் சமமாக மதித்து, அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாத்து, நேர்மையாகச் செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, உங்களை வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement