• Nov 22 2024

வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் மீது நடவடிக்கை? – பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

Chithra / Dec 12th 2023, 12:41 pm
image

 

வெளிநாடுகளில் கூலிப்படையாக செயல்படும் முன்னாள் இராணுவ வீரர்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைச்சிற்கோ அல்லது நாட்டின் இராணுவத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டால் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க முடியும், இல்லையெனில், அத்தகைய நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலின் போது உக்ரேனிய வெளிநாட்டு படையணிக்காக போரிட்ட மூன்று இலங்கை முன்னாள் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் செய்திகளின் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்புகளில் சேருவதற்கு சட்டவிரோதமான வழிகளை பயன்படுத்துவதால், அத்தகைய நபர்களை அடையாளம் காண்பது சற்று கடினமாக உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் மீது நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்  வெளிநாடுகளில் கூலிப்படையாக செயல்படும் முன்னாள் இராணுவ வீரர்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைச்சிற்கோ அல்லது நாட்டின் இராணுவத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டால் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க முடியும், இல்லையெனில், அத்தகைய நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலின் போது உக்ரேனிய வெளிநாட்டு படையணிக்காக போரிட்ட மூன்று இலங்கை முன்னாள் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் செய்திகளின் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.அந்த அமைப்புகளில் சேருவதற்கு சட்டவிரோதமான வழிகளை பயன்படுத்துவதால், அத்தகைய நபர்களை அடையாளம் காண்பது சற்று கடினமாக உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement