புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கட்டுப்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புகளின் சாமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் இன்றைய தினம்(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள்.
கடந்த காலத்தில் கடற்தொழிலாளருக்கு வழங்குவதற்கு என இறக்குமதி செய்த வலைகள் தொடர்ந்தும் களஞ்சியசாலைகளில் உள்ளன. அவற்றை புதிய ஜனாதிபதி கடற்தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டும்.
மேலும், புதிய ஜனாதிபதி எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கட்டுப்படுத்த வேண்டும்.
மன்ணென்னை விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனை இன்னமும் குறைக்க வேண்டும் என கடற்தொழில் சமூகமாக கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நடவடிக்கை- ஜனாதிபதியிடம் மரியதாஸ் கோரிக்கை. புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கட்டுப்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புகளின் சாமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் இன்றைய தினம்(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். கடந்த காலத்தில் கடற்தொழிலாளருக்கு வழங்குவதற்கு என இறக்குமதி செய்த வலைகள் தொடர்ந்தும் களஞ்சியசாலைகளில் உள்ளன. அவற்றை புதிய ஜனாதிபதி கடற்தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டும்.மேலும், புதிய ஜனாதிபதி எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கட்டுப்படுத்த வேண்டும்.மன்ணென்னை விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனை இன்னமும் குறைக்க வேண்டும் என கடற்தொழில் சமூகமாக கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.