• Oct 09 2024

விளையாட்டில் மட்டுமல்ல கல்வியிலும் சாதனை படைத்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி..!

Sharmi / Oct 1st 2024, 9:07 pm
image

Advertisement

தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தைக்கொண்டோ போட்டியில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

கடந்த 28,29,30 ஆம்  திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ(Taekwondo) போட்டியில் 18 வயதுப் பிரிவில்  59-63 கிலோ எடைப் பிரிவில்  புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவி டிவொன்சி வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 

அதேவேளை, குறித்த மாணவி தற்பொழுது வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெற்று சித்தியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


விளையாட்டில் மட்டுமல்ல கல்வியிலும் சாதனை படைத்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி. தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தைக்கொண்டோ போட்டியில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 28,29,30 ஆம்  திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ(Taekwondo) போட்டியில் 18 வயதுப் பிரிவில்  59-63 கிலோ எடைப் பிரிவில்  புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவி டிவொன்சி வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அதேவேளை, குறித்த மாணவி தற்பொழுது வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெற்று சித்தியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement