• Feb 04 2025

சுங்க அனுமதி செயல்முறையில் ஏற்பட்ட தாமதங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை!

Chithra / Feb 4th 2025, 1:58 pm
image

 

கொழும்பு - புளுமெண்டல் பகுதியில் கொள்கலன் தாங்கி ஊர்திகளை நிறுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் தற்காலிக தரிப்பிடத்தின் பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில், அதன் ஒரு பகுதி இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

குறித்த தரிப்பிடம், இலங்கை சுங்கத்தால் நிர்வகிக்கப்படுவதாகத் துறைமுக அதிகார சபையின் தலைவர் அட்மிரல் சிரிமேவன் சரத்சந்திர ரணசிங்க தெரிவித்துள்ளார். 

சுங்க அனுமதி செயன்முறையில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக அண்மைக் காலமாகச் சுங்கத்தில் கடுமையான கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கொள்கலன் அனுமதி செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை சுங்கம் கடந்த 30 ஆம் திகதி முதல் நான்கு நாட்கள் விசேட திட்டமொன்றைச் செயல்படுத்தியது. 

இந்தப் பின்னணியிலேயே புளுமெண்டல் பகுதியில் தற்காலிக தரிப்பிடமொன்று நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க அனுமதி செயல்முறையில் ஏற்பட்ட தாமதங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை  கொழும்பு - புளுமெண்டல் பகுதியில் கொள்கலன் தாங்கி ஊர்திகளை நிறுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் தற்காலிக தரிப்பிடத்தின் பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில், அதன் ஒரு பகுதி இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த தரிப்பிடம், இலங்கை சுங்கத்தால் நிர்வகிக்கப்படுவதாகத் துறைமுக அதிகார சபையின் தலைவர் அட்மிரல் சிரிமேவன் சரத்சந்திர ரணசிங்க தெரிவித்துள்ளார். சுங்க அனுமதி செயன்முறையில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக அண்மைக் காலமாகச் சுங்கத்தில் கடுமையான கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொள்கலன் அனுமதி செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை சுங்கம் கடந்த 30 ஆம் திகதி முதல் நான்கு நாட்கள் விசேட திட்டமொன்றைச் செயல்படுத்தியது. இந்தப் பின்னணியிலேயே புளுமெண்டல் பகுதியில் தற்காலிக தரிப்பிடமொன்று நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement