• Jan 19 2025

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேரகம்

Tharmini / Jan 5th 2025, 10:58 am
image

யாழ். நாவாந்துறையில் நேற்று (4) வடமாகாண கடற்தொழிலாளர் இணைய நிர்வாகத்தினர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேரகம் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வடமாகாண ரீதியாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், பல  முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்டது. இந்திய இழுவை மடி படகுகளின் வரத்து, சட்டவிரோத மீன்பிடி முறைகள், சட்டவிரோத அட்டை பண்ணைகள் போன்ற முக்கிய பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டது. 

வடமராட்சி கடற்பகுதிகளில் சட்டவிரோத சுருக்குவலை, சட்டவிரோத அட்டை மற்றும் உழவு இயந்திரங்களை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிமடுத்த கடற்தொழில் அமைச்சர் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளில் முக்கியமான சுருக்குவலை, உழவு இயந்திரம் கொண்டு கரவலை இழுத்தல் போன்ற மீன்பிடி முறைகள் கட்டுக்குள் கொண்டுவருவதாக உறுதியளித்தார்.

இந்த கலந்துரையாடலில் வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் பிரான்சிஸ், வடமாகாண கடற்தொழில் இணையத்தின் செயலாளர் மொகமட் ஆலம், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் உப தலைவர் அன்ரனி, வடமாகாண கடற்தொழில் இணையத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் நடனேந்திரன், யாழ். மாவட்ட தலைவர் முரளிதரன், நிர்வாக உறுப்பினர்கள்,என பலரும் கலந்து கொண்டனர்.





தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேரகம் யாழ். நாவாந்துறையில் நேற்று (4) வடமாகாண கடற்தொழிலாளர் இணைய நிர்வாகத்தினர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேரகம் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில் வடமாகாண ரீதியாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.மேலும், பல  முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்டது. இந்திய இழுவை மடி படகுகளின் வரத்து, சட்டவிரோத மீன்பிடி முறைகள், சட்டவிரோத அட்டை பண்ணைகள் போன்ற முக்கிய பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டது. வடமராட்சி கடற்பகுதிகளில் சட்டவிரோத சுருக்குவலை, சட்டவிரோத அட்டை மற்றும் உழவு இயந்திரங்களை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிமடுத்த கடற்தொழில் அமைச்சர் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளில் முக்கியமான சுருக்குவலை, உழவு இயந்திரம் கொண்டு கரவலை இழுத்தல் போன்ற மீன்பிடி முறைகள் கட்டுக்குள் கொண்டுவருவதாக உறுதியளித்தார்.இந்த கலந்துரையாடலில் வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் பிரான்சிஸ், வடமாகாண கடற்தொழில் இணையத்தின் செயலாளர் மொகமட் ஆலம், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் உப தலைவர் அன்ரனி, வடமாகாண கடற்தொழில் இணையத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் நடனேந்திரன், யாழ். மாவட்ட தலைவர் முரளிதரன், நிர்வாக உறுப்பினர்கள்,என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement