• May 17 2024

மக்களின் நாளாந்த நடவடிக்கைகளை முடக்க நடவடிக்கை: சட்டத்தரணி தம்பையா குற்றச்சாட்டு!samugammedia

Sharmi / Apr 7th 2023, 10:22 pm
image

Advertisement

அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது சாதாரண மக்களின் நாளாந்த நடவடிக்கைகளை முடக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்தார்.

இதன் காரணமாகவே மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இளையதம்பி தம்பையா தெரிவித்தார்.

மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ளமையால் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இந்த சட்டத்தை பிற்போடுவதாக அறிவித்துள்ளார் என்றும் இந்த சட்டத்தை பிற்போடுவதற்கு பதிலாக முற்றாக இரத்து செய்யவேண்டும் எனவும் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்தார்.

எனவே, இதற்காக இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் கூட்டாகவும், தனித்தனியாகவும் செயற்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் நாளாந்த நடவடிக்கைகளை முடக்க நடவடிக்கை: சட்டத்தரணி தம்பையா குற்றச்சாட்டுsamugammedia அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது சாதாரண மக்களின் நாளாந்த நடவடிக்கைகளை முடக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்தார்.இதன் காரணமாகவே மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இளையதம்பி தம்பையா தெரிவித்தார்.மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ளமையால் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இந்த சட்டத்தை பிற்போடுவதாக அறிவித்துள்ளார் என்றும் இந்த சட்டத்தை பிற்போடுவதற்கு பதிலாக முற்றாக இரத்து செய்யவேண்டும் எனவும் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்தார்.எனவே, இதற்காக இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் கூட்டாகவும், தனித்தனியாகவும் செயற்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement