எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் போதிய சுகாதார வசதிகளை எதிர்கொள்ளும் சவாலை எதிர்நோக்கும் பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நேற்றையதினம்(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிகக் கடினமான, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமையைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள சுமார் எட்டு இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ஒரு பில்லியன் ரூபா எனவும், ஒரு வவுச்சர் அட்டை ஒன்றின் பெறுமதி சுமார் 1200 ரூபா எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் பிள்ளைகளை பலப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.
பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை. கல்வி அமைச்சர் தெரிவிப்பு. எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் போதிய சுகாதார வசதிகளை எதிர்கொள்ளும் சவாலை எதிர்நோக்கும் பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நேற்றையதினம்(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மிகக் கடினமான, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமையைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள சுமார் எட்டு இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ஒரு பில்லியன் ரூபா எனவும், ஒரு வவுச்சர் அட்டை ஒன்றின் பெறுமதி சுமார் 1200 ரூபா எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் பிள்ளைகளை பலப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.