முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவின் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் தனியார் காணிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத உப்பள அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் வலியுறுத்தலுக்கு அமைவாக, கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் துணையுடன் கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
குறித்த நடவடிக்கையை தாம் நேரில் சென்று தடுத்ததுடன், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஆகியவற்றிடம் உப்பள அமைக்கும் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கும் உரிய அமைச்சுக்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டதுடன், நாடாளுமன்றத்திலும் இந்த விடயம் தொடர்பில் எடுத்துரைத்ததாக ரவிகரன் தெரிவித்தார்.
அத்துடன், அமைச்சர் லால்காந்த மற்றும் சுற்றாடல் அமைச்சர் பங்கேற்ற வவுனியா மாவட்ட செயலகக் கூட்டத்திலும் குறித்த உப்பள நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், இதுவரை நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படவில்லை எனவும், தொடர்ந்து உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், குறித்த பகுதி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டதா அல்லது மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள மணலாறு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டதா என்பது தொடர்பிலும் சர்ச்சை நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் நில அளவைத் திணைக்களத்தின் சுவட்டு வரைபடம் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த உப்பளம் அமைக்கப்படும் பகுதி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், உப்பளம் அமைப்பதற்காக மொத்தம் 44.197 ஏக்கர் காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 13 ஏக்கர் 02 ரூட் காணி அரச காணியாகவும், சுமார் 31 ஏக்கர் காணி தனியார் காணியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பொதுமக்களிடமிருந்து பிரதேச செயலகத்தினால் பெறப்பட்ட தனியார் காணி ஆவணமொன்றும் நில அளவைத் திணைக்களத்தின் சுவட்டு வரைபடத்துடன் தொடர்புடையதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டதுடன், அதன் பெரும்பகுதி தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் என்பதும் ஆவணரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், அங்கு தொடர்ந்தும் உப்பளம் அமைக்கப்படுவதால் கொக்கிளாய் கடல்நீரேரியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமும் முறையிட்டதாகவும், அவரது தலையீட்டின் ஊடாக உரிய அமைச்சின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டதாகவும் ரவிகரன் தெரிவித்தார்.
எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சட்டவிரோத உப்பள நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, தனியார் காணிகளிலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரச காணிகளிலும் அத்துமீறி உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நடவடிக்கைகளைத் தடுப்பதற்குத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவினால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாயில் சட்டவிரோத உப்பளம் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தம் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவின் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் தனியார் காணிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத உப்பள அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் வலியுறுத்தலுக்கு அமைவாக, கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் துணையுடன் கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.குறித்த நடவடிக்கையை தாம் நேரில் சென்று தடுத்ததுடன், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஆகியவற்றிடம் உப்பள அமைக்கும் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கும் உரிய அமைச்சுக்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டதுடன், நாடாளுமன்றத்திலும் இந்த விடயம் தொடர்பில் எடுத்துரைத்ததாக ரவிகரன் தெரிவித்தார்.அத்துடன், அமைச்சர் லால்காந்த மற்றும் சுற்றாடல் அமைச்சர் பங்கேற்ற வவுனியா மாவட்ட செயலகக் கூட்டத்திலும் குறித்த உப்பள நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.எனினும், இதுவரை நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படவில்லை எனவும், தொடர்ந்து உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையில், குறித்த பகுதி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டதா அல்லது மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள மணலாறு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டதா என்பது தொடர்பிலும் சர்ச்சை நிலவி வந்துள்ளது.இந்த நிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் நில அளவைத் திணைக்களத்தின் சுவட்டு வரைபடம் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த உப்பளம் அமைக்கப்படும் பகுதி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.மேலும், உப்பளம் அமைப்பதற்காக மொத்தம் 44.197 ஏக்கர் காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 13 ஏக்கர் 02 ரூட் காணி அரச காணியாகவும், சுமார் 31 ஏக்கர் காணி தனியார் காணியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், பொதுமக்களிடமிருந்து பிரதேச செயலகத்தினால் பெறப்பட்ட தனியார் காணி ஆவணமொன்றும் நில அளவைத் திணைக்களத்தின் சுவட்டு வரைபடத்துடன் தொடர்புடையதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், குறித்த பகுதி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டதுடன், அதன் பெரும்பகுதி தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் என்பதும் ஆவணரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.இவ்வாறான நிலையில், அங்கு தொடர்ந்தும் உப்பளம் அமைக்கப்படுவதால் கொக்கிளாய் கடல்நீரேரியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமும் முறையிட்டதாகவும், அவரது தலையீட்டின் ஊடாக உரிய அமைச்சின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டதாகவும் ரவிகரன் தெரிவித்தார்.எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சட்டவிரோத உப்பள நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இதனையடுத்து, தனியார் காணிகளிலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரச காணிகளிலும் அத்துமீறி உப்பளம் அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும், குறித்த நடவடிக்கைகளைத் தடுப்பதற்குத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவினால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.