• Sep 23 2024

பெருந்தோட்ட மக்களுக்காக ”அதி சக்தி” எனும் கோதுமை மா அறிமுக நிகழ்வு! samugammedia

Tamil nila / Nov 16th 2023, 6:41 pm
image

Advertisement

உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவின் ஆய்வு அறிக்கையின் படி நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்கேட்டின் பின்னர் பெருந்தோட்ட மக்களிடையே உணவு பாதுகாப்பு மற்றும் போசனை மட்டத்தின் சரிவு அதிகரித்துள்ளது. இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல மாற்று திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அந்தவகையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவிற்கமைய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் செரண்டிப் கோதுமை மா உற்பத்தி நிறுவனம் ஆகியன இரண்டும் இணைந்து சத்துட்டப்பட்ட கோதுமை மா அறிமுக விழா நேற்று (15.11.2023)  நுவரெலியாவில் இடம்பெற்றது.



இந்த கோதுமை மா பைபர் சத்து, இரும்பு சத்து, போலிக்கமிலம் மற்றும் விட்டமின் பீ12 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய விசேட கோதுமை மா ஆகும்.

இது சந்தையில் உள்ள சாதாரண கோதுமை மாவை விட விலை மலிவாக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக மாத்திரம் விற்கப்படும்.

பெரும்பான்மையான தொழிலாளர்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் இடையே போசனை குறைப்பாடும் விசேடமாக எனிமிக் எனும் நோயும் காணப்படுகின்றது. இதற்கு தீர்வு ஒன்று வழங்கும் முகமாகவே முதற்கட்டமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சர்மா, பெருந்தோட்ட யாக்கங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட அதன் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.


பெருந்தோட்ட மக்களுக்காக ”அதி சக்தி” எனும் கோதுமை மா அறிமுக நிகழ்வு samugammedia உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவின் ஆய்வு அறிக்கையின் படி நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்கேட்டின் பின்னர் பெருந்தோட்ட மக்களிடையே உணவு பாதுகாப்பு மற்றும் போசனை மட்டத்தின் சரிவு அதிகரித்துள்ளது. இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல மாற்று திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.அந்தவகையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவிற்கமைய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் செரண்டிப் கோதுமை மா உற்பத்தி நிறுவனம் ஆகியன இரண்டும் இணைந்து சத்துட்டப்பட்ட கோதுமை மா அறிமுக விழா நேற்று (15.11.2023)  நுவரெலியாவில் இடம்பெற்றது.இந்த கோதுமை மா பைபர் சத்து, இரும்பு சத்து, போலிக்கமிலம் மற்றும் விட்டமின் பீ12 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய விசேட கோதுமை மா ஆகும்.இது சந்தையில் உள்ள சாதாரண கோதுமை மாவை விட விலை மலிவாக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக மாத்திரம் விற்கப்படும்.பெரும்பான்மையான தொழிலாளர்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் இடையே போசனை குறைப்பாடும் விசேடமாக எனிமிக் எனும் நோயும் காணப்படுகின்றது. இதற்கு தீர்வு ஒன்று வழங்கும் முகமாகவே முதற்கட்டமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சர்மா, பெருந்தோட்ட யாக்கங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட அதன் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement