• Jun 30 2024

இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை..! மூவர் பலி - பலர் வைத்தியசாலையில்

Chithra / Jun 28th 2024, 12:35 pm
image

Advertisement

  

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திரா காந்தி விமான நிலையத்தின் முனையம் 1இல் உள்ள மேற்கூரையே இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து அனைத்து விமானப் புறப்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்தோடு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் இடைவிடாத மழை பெய்து வரும் நிலையில், இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெய்த கனமழை  காரணமாக, டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் பழைய புறப்பாடு முனையத்தில் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.

இந்நிலையில் அடுத்த இரண்டு மணிநேரங்களுக்கு வானிலை ஆய்வு மையம் தீவிரமான மழை தொடரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் மழை காரணமாக குறித்த மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை. மூவர் பலி - பலர் வைத்தியசாலையில்   டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்திரா காந்தி விமான நிலையத்தின் முனையம் 1இல் உள்ள மேற்கூரையே இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது.இதனையடுத்து அனைத்து விமானப் புறப்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.அத்தோடு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.டெல்லியில் இடைவிடாத மழை பெய்து வரும் நிலையில், இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.பெய்த கனமழை  காரணமாக, டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் பழைய புறப்பாடு முனையத்தில் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.இந்நிலையில் அடுத்த இரண்டு மணிநேரங்களுக்கு வானிலை ஆய்வு மையம் தீவிரமான மழை தொடரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.தொடர் மழை காரணமாக குறித்த மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement