• Nov 19 2024

தோல்வியடைந்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய - அலிசப்ரி ரஹீம்

Tharmini / Nov 17th 2024, 1:35 pm
image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், 

முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு வழங்கிய வாக்குறுதியின் படி தெரிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிக்கான டயர்களை நேற்று (16) தனது அலுவலகத்தில் வழங்கி வைத்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இம்முறை ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு தராசு சின்னத்தில் போட்டியிட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அப்போது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, 

அக்கட்சியின் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம் ஆளும் தரப்பினருடன் இணைந்துகொண்டு தனது மாவட்ட மக்களுக்கான பணிகளை முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்தில் போட்டியிட்ட அலிசப்ரி ரஹீம், பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




தோல்வியடைந்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய - அலிசப்ரி ரஹீம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு வழங்கிய வாக்குறுதியின் படி தெரிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிக்கான டயர்களை நேற்று (16) தனது அலுவலகத்தில் வழங்கி வைத்தார்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இம்முறை ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு தராசு சின்னத்தில் போட்டியிட்டார்.கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அப்போது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, அக்கட்சியின் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம் ஆளும் தரப்பினருடன் இணைந்துகொண்டு தனது மாவட்ட மக்களுக்கான பணிகளை முன்னெடுத்திருந்தார்.இந்த நிலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்தில் போட்டியிட்ட அலிசப்ரி ரஹீம், பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement