• May 21 2024

“மாலைத்தீவிலிருந்த இந்திய இராணுவ வீரர்கள் அனைவரும் வெளியேற்றம்..!!

Tamil nila / May 10th 2024, 7:28 pm
image

Advertisement

காலவகாசம் நிறைவடையும் முன்னரே அனைத்து இந்திய இராணுவ வீரர்களும் மாலைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக மாலைத்தீவு  ஜனாதிபதி முகமது மூயிஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக வெளியேற்றப்பட்ட இந்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலைத்தீவிலிருந்த இந்திய இராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முகமது மூயிஸின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

சீன ஆதரவாளர் என கூறப்படும் தற்போதைய மாலைத்தீவு ஜனாதிபதியான முகமது மூயிஸ் இந்தியாவுடன் சுமுகமான உறவை கொண்டிராதவர்.

“தான் ஆட்சிக்கு வந்தால் மாலைத்தீவில் இருந்து இந்திய இராணுவ வீரர்களை விரட்டியடிப்பேன்” என தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர் கூறியிருக்கின்றார்.

இன்றுடன் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரர் மாலைத்தீவில் இருக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்திய இராணுவ வீரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மாலைத்தீவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் முகமது மூயிஸின் கட்சி அமோச வெற்றி பெற்றது.

இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிருப்பிப்பதற்கான தேர்தலாக பார்க்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மாலைத்தீவு ஜனாதிபதிக்கு சட்டங்களை நிறைவேற்றுவது இலகுவானதாகும்.

மேலும் முகமது மூயிஸின் இந்த வெற்றி சீனாவுக்கான வெற்றியாக அமைவதுடன் இந்தியாவின் தோல்வி என்றும் கூட கூறப்பட்டது.


“மாலைத்தீவிலிருந்த இந்திய இராணுவ வீரர்கள் அனைவரும் வெளியேற்றம். காலவகாசம் நிறைவடையும் முன்னரே அனைத்து இந்திய இராணுவ வீரர்களும் மாலைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக மாலைத்தீவு  ஜனாதிபதி முகமது மூயிஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இறுதியாக வெளியேற்றப்பட்ட இந்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மாலைத்தீவிலிருந்த இந்திய இராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முகமது மூயிஸின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.சீன ஆதரவாளர் என கூறப்படும் தற்போதைய மாலைத்தீவு ஜனாதிபதியான முகமது மூயிஸ் இந்தியாவுடன் சுமுகமான உறவை கொண்டிராதவர்.“தான் ஆட்சிக்கு வந்தால் மாலைத்தீவில் இருந்து இந்திய இராணுவ வீரர்களை விரட்டியடிப்பேன்” என தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர் கூறியிருக்கின்றார்.இன்றுடன் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரர் மாலைத்தீவில் இருக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்திய இராணுவ வீரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.மாலைத்தீவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் முகமது மூயிஸின் கட்சி அமோச வெற்றி பெற்றது.இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிருப்பிப்பதற்கான தேர்தலாக பார்க்கப்பட்டது.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மாலைத்தீவு ஜனாதிபதிக்கு சட்டங்களை நிறைவேற்றுவது இலகுவானதாகும்.மேலும் முகமது மூயிஸின் இந்த வெற்றி சீனாவுக்கான வெற்றியாக அமைவதுடன் இந்தியாவின் தோல்வி என்றும் கூட கூறப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement