• Nov 23 2024

அகில இலங்கை ரோபோட்டிக் புத்தாக்க போட்டி- வெற்றியீட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு!

Tamil nila / Nov 22nd 2024, 8:53 pm
image

அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ரோபோட்டிக் புத்தாக்க போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த சிவதேவன் கபிலாஸ் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றமைக்காக பாடசாலை சமூகம் அவரை கௌரவப்படுத்தி இருந்தது.


அகில இலங்கை ரீதியில் இடம் பெறும் ரோபோடிக் தொடர்பான புத்தக போட்டியில் 17 வயதான வவுனியா விபுலானந்தக் கல்லூரி மாணவனான சி. கபிலாஸ் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் ஒன்றினை கண்டுபிடித்து அதனை காட்சிப்படுத்தியிருந்தார். இதன் ஊடாக அவருக்கு தேசிய மட்டத்தில் முதல் பரிசு கிடைத்ததோடு அவருக்கான பதக்கமும் வழங்கப்பட்டிருந்தது.


இது தொடர்பில் சி. கபிலாஸ் கருத்து தெரிவிக்கையில்,, 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கு சீட்டை அச்சடிப்பதற்கு அதிகமான பணம் செலவு செய்யப்பட்டதாக எனது பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் இந்த செலவினை குறைப்பதற்கு ஏதேனும் கண்டுபிடித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது.


அதன் ஊடாக ஒரு இலத்திரன்கள் வாக்கு அளிப்பு இயந்திரம் ஒன்றினை கண்டுபிடித்ததற்கு முயற்சி செய்தேன். அதில் வெற்றியும் பெற்றேன்.

எனினும் அதற்கான உபகரணங்கள் பலவற்றை வவுனியாவில் பெற்றுக் கொள்வதற்கு முடியவில்லை. அதனால் கொழும்புக்கு சென்று அந்த பொருட்களை வாங்க வேண்டிய தேவை இருந்தது.


அவ்வாறு வாங்கி பலத்த சிரமத்துக்கு மத்தியில் அதனை கண்டுபிடித்து காட்சிப்படுத்தியிருந்தேன். இந்த கண்டுபிடிப்பினை மேலும் விரிவுபடுத்தி இலங்கையில் இலத்திரனியல் வாக்கு அளிப்பு இயந்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும் தேர்தல் ஆணைக்குழுவும் ஒத்துழைப்பு வழங்குமாக இருந்தால் இதனை இன்னும் திறம்பட செயற்படுத்துவதற்கு என்னால் முடியும் என தெரிவித்திருந்தார்.



அகில இலங்கை ரோபோட்டிக் புத்தாக்க போட்டி- வெற்றியீட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ரோபோட்டிக் புத்தாக்க போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த சிவதேவன் கபிலாஸ் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றமைக்காக பாடசாலை சமூகம் அவரை கௌரவப்படுத்தி இருந்தது.அகில இலங்கை ரீதியில் இடம் பெறும் ரோபோடிக் தொடர்பான புத்தக போட்டியில் 17 வயதான வவுனியா விபுலானந்தக் கல்லூரி மாணவனான சி. கபிலாஸ் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் ஒன்றினை கண்டுபிடித்து அதனை காட்சிப்படுத்தியிருந்தார். இதன் ஊடாக அவருக்கு தேசிய மட்டத்தில் முதல் பரிசு கிடைத்ததோடு அவருக்கான பதக்கமும் வழங்கப்பட்டிருந்தது.இது தொடர்பில் சி. கபிலாஸ் கருத்து தெரிவிக்கையில்,, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கு சீட்டை அச்சடிப்பதற்கு அதிகமான பணம் செலவு செய்யப்பட்டதாக எனது பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் இந்த செலவினை குறைப்பதற்கு ஏதேனும் கண்டுபிடித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது.அதன் ஊடாக ஒரு இலத்திரன்கள் வாக்கு அளிப்பு இயந்திரம் ஒன்றினை கண்டுபிடித்ததற்கு முயற்சி செய்தேன். அதில் வெற்றியும் பெற்றேன்.எனினும் அதற்கான உபகரணங்கள் பலவற்றை வவுனியாவில் பெற்றுக் கொள்வதற்கு முடியவில்லை. அதனால் கொழும்புக்கு சென்று அந்த பொருட்களை வாங்க வேண்டிய தேவை இருந்தது.அவ்வாறு வாங்கி பலத்த சிரமத்துக்கு மத்தியில் அதனை கண்டுபிடித்து காட்சிப்படுத்தியிருந்தேன். இந்த கண்டுபிடிப்பினை மேலும் விரிவுபடுத்தி இலங்கையில் இலத்திரனியல் வாக்கு அளிப்பு இயந்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும் தேர்தல் ஆணைக்குழுவும் ஒத்துழைப்பு வழங்குமாக இருந்தால் இதனை இன்னும் திறம்பட செயற்படுத்துவதற்கு என்னால் முடியும் என தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement