தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அது, அடுத்து வரும் 2 நாட்களில் காற்றழுத்தமாக விருத்தியடையும் என அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம்- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது, அடுத்து வரும் 2 நாட்களில் காற்றழுத்தமாக விருத்தியடையும் என அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.