• Nov 19 2024

ஒட்டுமொத்த அரசியல் வாதிகளும் தமிழ் இனத்தின் சார்பில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் - அனந்தி சசிதரன் தெரிவிப்பு..!!

Tamil nila / Mar 24th 2024, 7:02 pm
image

சம்பந்தன் செய்துள்ள வரலாற்று தவறை இனிமேலும் தமிழ் தேசிய அரசியல் தரப்புக்கள் செய்யாமல் '"ஒட்டுமொத்த அரசியல் வாதிகளும் தமிழ் இனத்தின் சார்பில் சிந்தித்து செயலாற்ற வேண்டும்"" என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை அடையாளமாக முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளராக போட்டு தேர்தல் பிரச்சாரத்தை நாங்கள் செய்திருந்தோம். அந்த காலத்தில் நாங்கள் சொன்ன செய்தியினை தமிழ் தேசிய காட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

இன்றைக்கு அது ஒரு பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. இன்று தமிழர் தரப்பு கட்சிகள் ஒரு பொது வேட்ப்பாளரை இறக்க வேண்டும் என்று பேசுகின்றார்கள். கடந்த காலங்களில் நான் சிவாஜிலிங்கத்தை ஆதரித்தேன். அப்பொழுது சிவாஜிலிங்கத்தை ஆதரித்தால் அவர் பெரிய ஆளாக வந்து விடுவார். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடிவிடும் என்று தான்  தமிழ் தேசிய அரசியல் வாதிகள் பின்னடித்தார்கள். 

இந்த நிலைமை மாறி அவர்கள் பொது வேட்பாளரை பற்றி பேசுகின்ற விடயம் நல்ல  விடயம். இதை தான் நாங்கள் சொல்லுகின்றோம்.  ஒரு இன அழிப்புக்கு ஆளான இனம் சிங்கள தலைமைத்துவத்துக்கு வாழ முடியாது என்ற செய்தியை உலகத்துக்கு சொல்வதற்காக தமிழ் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை இறக்கி அவருக்கு நாங்கள் வாக்கு போட்டு சர்வதேசத்துக்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும். 

உண்மையில்  2010 ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இதனை செய்திருந்தால் தமிழர்களுக்கான ஒரு இன அழிப்புக்கான நீதியும் கிடைத்திருக்கும், ஒரு நியாயமான அரசியல் தீர்வும் எட்டப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்-  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த அரசியல் வாதிகளும் தமிழ் இனத்தின் சார்பில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் - அனந்தி சசிதரன் தெரிவிப்பு. சம்பந்தன் செய்துள்ள வரலாற்று தவறை இனிமேலும் தமிழ் தேசிய அரசியல் தரப்புக்கள் செய்யாமல் '"ஒட்டுமொத்த அரசியல் வாதிகளும் தமிழ் இனத்தின் சார்பில் சிந்தித்து செயலாற்ற வேண்டும்"" என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை அடையாளமாக முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளராக போட்டு தேர்தல் பிரச்சாரத்தை நாங்கள் செய்திருந்தோம். அந்த காலத்தில் நாங்கள் சொன்ன செய்தியினை தமிழ் தேசிய காட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கு அது ஒரு பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. இன்று தமிழர் தரப்பு கட்சிகள் ஒரு பொது வேட்ப்பாளரை இறக்க வேண்டும் என்று பேசுகின்றார்கள். கடந்த காலங்களில் நான் சிவாஜிலிங்கத்தை ஆதரித்தேன். அப்பொழுது சிவாஜிலிங்கத்தை ஆதரித்தால் அவர் பெரிய ஆளாக வந்து விடுவார். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடிவிடும் என்று தான்  தமிழ் தேசிய அரசியல் வாதிகள் பின்னடித்தார்கள். இந்த நிலைமை மாறி அவர்கள் பொது வேட்பாளரை பற்றி பேசுகின்ற விடயம் நல்ல  விடயம். இதை தான் நாங்கள் சொல்லுகின்றோம்.  ஒரு இன அழிப்புக்கு ஆளான இனம் சிங்கள தலைமைத்துவத்துக்கு வாழ முடியாது என்ற செய்தியை உலகத்துக்கு சொல்வதற்காக தமிழ் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை இறக்கி அவருக்கு நாங்கள் வாக்கு போட்டு சர்வதேசத்துக்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும். உண்மையில்  2010 ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இதனை செய்திருந்தால் தமிழர்களுக்கான ஒரு இன அழிப்புக்கான நீதியும் கிடைத்திருக்கும், ஒரு நியாயமான அரசியல் தீர்வும் எட்டப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்-  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement