• Nov 06 2024

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி கிடைக்க சகல தரப்பும் முன்வர வேண்டும்-யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து..!

Sharmi / Aug 31st 2024, 3:59 pm
image

Advertisement

யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு முன்னரும், தற்போதும் இலங்கை அரச படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியானது இதுவரை பேசுபொருளாகவே இருக்கிறதே தவிர அதற்கான தீர்வுகளும் இதுவரை எட்டப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோரது தினத்தினை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகிலேயே காணாமல் ஆக்கப்படுவது என்பது மிகப்பெரிய குற்றமாகும். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்து என்று கூட தெரியாமல், தமது பிள்ளைகள் உயிரோடு வருவார்கள் என்ற ஏக்கத்துடன் பெற்றோர் கடந்த ஐந்து வருடங்களாக தமது போராட்ட வடிவங்களை மாற்றி மாற்றி தமது பிள்ளைகளின் படங்களோடு வீதி வீதியாக திரிகின்றனர். 

இதனை சர்வதேச சமூகமும், இலங்கை அரசாங்கமும் கண்டுகொண்டு பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு நீதியை நிலை நாட்ட வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் சார்பாக இந்த இடத்தில் வலியுறுத்துகின்றோம். 

இந்த தாய்மார் தமது பிள்ளைகளை தேடி தேடி இறந்து போன வரலாற்று சம்பவங்கள் காணப்படுகின்றன.

இது ஒரு துயரச்சம்பவம், இனி இருக்கின்ற தாய்மார்களாவது தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை தெரிந்து கொள்வதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் சகல தரப்புக்களும் முன்வர வேண்டும் என இந்த இடத்தில் கோரிக்கை முன்வைக்கின்றோம். தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளும் இந்த நேரத்தில் இது குறித்து சிந்திக்க வேண்டும். 

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவற்ற காலப்பகுதியில் இருந்து கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களுடைய வாக்குகளை அபகரித்து, தென்னிலங்கையில் உள்ள அரசாங்கத்தின் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறையையும், அந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு மேற்கொள்கின்ற அக்கறையையும், வாக்களித்த நமது மக்களுடைய உரிமைகளிலும் நலன் சார்ந்த விடயங்களிலும் காட்ட வேண்டும் என இந்த இடத்தில் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி கிடைக்க சகல தரப்பும் முன்வர வேண்டும்-யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து. யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு முன்னரும், தற்போதும் இலங்கை அரச படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியானது இதுவரை பேசுபொருளாகவே இருக்கிறதே தவிர அதற்கான தீர்வுகளும் இதுவரை எட்டப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோரது தினத்தினை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.உலகிலேயே காணாமல் ஆக்கப்படுவது என்பது மிகப்பெரிய குற்றமாகும். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்து என்று கூட தெரியாமல், தமது பிள்ளைகள் உயிரோடு வருவார்கள் என்ற ஏக்கத்துடன் பெற்றோர் கடந்த ஐந்து வருடங்களாக தமது போராட்ட வடிவங்களை மாற்றி மாற்றி தமது பிள்ளைகளின் படங்களோடு வீதி வீதியாக திரிகின்றனர். இதனை சர்வதேச சமூகமும், இலங்கை அரசாங்கமும் கண்டுகொண்டு பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு நீதியை நிலை நாட்ட வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் சார்பாக இந்த இடத்தில் வலியுறுத்துகின்றோம். இந்த தாய்மார் தமது பிள்ளைகளை தேடி தேடி இறந்து போன வரலாற்று சம்பவங்கள் காணப்படுகின்றன. இது ஒரு துயரச்சம்பவம், இனி இருக்கின்ற தாய்மார்களாவது தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை தெரிந்து கொள்வதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் சகல தரப்புக்களும் முன்வர வேண்டும் என இந்த இடத்தில் கோரிக்கை முன்வைக்கின்றோம். தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளும் இந்த நேரத்தில் இது குறித்து சிந்திக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவற்ற காலப்பகுதியில் இருந்து கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களுடைய வாக்குகளை அபகரித்து, தென்னிலங்கையில் உள்ள அரசாங்கத்தின் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறையையும், அந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு மேற்கொள்கின்ற அக்கறையையும், வாக்களித்த நமது மக்களுடைய உரிமைகளிலும் நலன் சார்ந்த விடயங்களிலும் காட்ட வேண்டும் என இந்த இடத்தில் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement