• May 17 2024

எனது கொள்கைகளுக்குட்படாத அனைவரும் எனது எதிரிகள் தான்..! மைத்திரி இறுமாப்பு samugammedia

Chithra / Sep 28th 2023, 12:36 pm
image

Advertisement


எனது கொள்கைகளுக்குட்படாத அனைவரும் எனது எதிரிகள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கங்காராமய ஆலய நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனது கொள்கைகளுக்குட்படாதவர்கள் என்பதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவருக்கும் நான் பொதுவான எதிரியாக மாறியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறித்து வினவிய போது, 

அவருடன் தான் ஒரு சந்திப்பில் ஈடுபட்டு தேனீர் அருந்தியதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களாக நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். மேலும் எங்களுக்குள் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி குறித்து வினவிய போது அவருக்கெதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்காற்று சபை சட்ட நடவடிக்கை எடுக்கும் என மைத்திரி தெரிவித்தார். 


எனது கொள்கைகளுக்குட்படாத அனைவரும் எனது எதிரிகள் தான். மைத்திரி இறுமாப்பு samugammedia எனது கொள்கைகளுக்குட்படாத அனைவரும் எனது எதிரிகள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.சமீபத்தில் கங்காராமய ஆலய நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எனது கொள்கைகளுக்குட்படாதவர்கள் என்பதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவருக்கும் நான் பொதுவான எதிரியாக மாறியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறித்து வினவிய போது, அவருடன் தான் ஒரு சந்திப்பில் ஈடுபட்டு தேனீர் அருந்தியதாக அவர் தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களாக நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். மேலும் எங்களுக்குள் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அவர் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி குறித்து வினவிய போது அவருக்கெதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்காற்று சபை சட்ட நடவடிக்கை எடுக்கும் என மைத்திரி தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement