• Oct 23 2024

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள்; இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் அறிவிப்பு!

Chithra / Oct 22nd 2024, 10:37 am
image

Advertisement

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு கெலஉறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

உதயகம்மன்பில வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள இரண்டு அதிகாரிகளிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை தனது மறுப்பினை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளனர்.

அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கவுள்ளதாக அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையை எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுதவுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நேற்றையதினம் அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள்; இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் அறிவிப்பு  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு கெலஉறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.உதயகம்மன்பில வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள இரண்டு அதிகாரிகளிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை தனது மறுப்பினை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளனர்.அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கவுள்ளதாக அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.இதேவேளை ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையை எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுதவுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நேற்றையதினம் அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement