எனினும் இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பு இதுவரையும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவின் பிரபல ஹோட்டலில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கு காசாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரை உணவகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. காசாவின் ஆர்வலர்கள், செய்தியாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடிக்கடி பயன்படுத்துகின்ற இந்த உணவகத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் குறைந்தது 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த 20 நபர்களின் உடல்களையும், காயமடைந்த பலரையும் மீட்புக்குழுக்கள் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பு இதுவரையும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.