• Jul 01 2025

கல்முனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு; போக்குவரத்து பாதிப்பு

Chithra / Jul 1st 2025, 11:45 am
image


 

அம்பாறை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுற்றுச் சூழல் மாசடைந்து காணப்படுவதாகவும், வீதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதசாரிகளும் சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக  கல்முனை மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்முனை   மக்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னர் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ்  மாநகர பகுதியில்  போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டக்காலி மாடுகள் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கல்முனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு; போக்குவரத்து பாதிப்பு  அம்பாறை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுற்றுச் சூழல் மாசடைந்து காணப்படுவதாகவும், வீதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பாதசாரிகளும் சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இது தொடர்பாக  கல்முனை மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்முனை   மக்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.முன்னர் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ்  மாநகர பகுதியில்  போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டக்காலி மாடுகள் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement