• Jul 01 2025

வீட்டிற்குள் நுழைந்து இளைஞர்களை கடத்திய மர்மக்குழு; ஒருவர் சுட்டுக்கொலை; ஒருவர் படுகாயம்

Chithra / Jul 1st 2025, 7:52 am
image


கஹவத்த, யாயன்னா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று இரவு சென்ற குழு, இரண்டு பேரை கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்தார்

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு இளைஞன் கஹவத்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹவத்த, யாயன்னா, கொஸ்கெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (30) இரவு வந்த நான்கு பேர், வீட்டிலிருந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, குறித்த இளைஞர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 22 வயது இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அதே நேரத்தில் காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார், எதற்காக என்பது இன்னும்  வெளிவரவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  கஹவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டிற்குள் நுழைந்து இளைஞர்களை கடத்திய மர்மக்குழு; ஒருவர் சுட்டுக்கொலை; ஒருவர் படுகாயம் கஹவத்த, யாயன்னா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று இரவு சென்ற குழு, இரண்டு பேரை கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்தார்குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு இளைஞன் கஹவத்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கஹவத்த, யாயன்னா, கொஸ்கெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (30) இரவு வந்த நான்கு பேர், வீட்டிலிருந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.பின்னர் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, குறித்த இளைஞர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 22 வயது இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில் காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார், எதற்காக என்பது இன்னும்  வெளிவரவில்லை.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  கஹவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement