அயலகத் தமிழர் தினம் என்ற நிகழ்வை நாங்கள் வரவேற்றாலும் வட பகுதி மீனவர்களின் நலனும் அதில் உள்வாங்கப்பட வேண்டும். இன்று வரை தமிழக மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.அதற்கு காரணம் தமிழக முதல்வரை சேரும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழகத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தினம் என்ற நிகழ்வு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் விமர்சையாக நடைபெற்றிருக்கின்றது. இலங்கையில் இருந்து அதற்கான பிரதிநிதிகள் சென்றிருக்கின்றார்கள் பல விடயங்கள் குறிப்பாக தமிழால் இணைகின்ற பல விடையங்கள் அங்கு இடம் பெற்றுள்ளது.
இது காலத்தின் தேவையாகும்,உண்மையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தான் தமிழ் என்ற உணர்வையும் தமிழோடு இணைய வேண்டும் என்ற அந்த ஆசையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருந்தது.
உண்மையில் இரு நாட்டை நாங்கள் எடுத்துக் கொண்டால் தமிழால் இணைவோம் என்பதற்கு பொருத்தமான நாடாக தமிழகத்துக்கும் வடபகுதிக்கும் நிறைய உறவு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு தமிழால் இணையக் கூடிய வகையில் எந்த நாடுகளும் இல்லை.இலங்கைக்கு தான் அந்த வார்த்தை பொருத்தமானது.
எனவே நான் கூற வருகின்ற விடயம் இந்த தமிழால் இணைவோம் என்பது வார்த்தை. உண்மையில் பாராட்ட கூடியதாக இருந்தாலும் தமிழால் நாங்கள் இணைந் திருக்கின்றோமா?
தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்களுக்கும் இலங்கை வடபகுதியில் இருக்கும் தமிழர்களுக்குமான உறவு தொப்புள் கொடி உறவு என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த உறவு ரீதியாக இது ஒரு அரசியலுக்கும் மொழிக்குமானது அல்ல .
அதையும் தாண்டி வாழ்வாதாரம் ஒன்றிணைவு அவர்களின் குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் அதன் ஊடாக பார்க்கப்பட வேண்டியதொன்றாகும்.இருந்த போதும் இங்கு நடைபெறுகின்ற விடயம் தமிழக மீனவர்களால் வடபகுதியில் இருக்கும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
இந்த நிகழ்வு தொடர்ச்சியாக பல வருடங்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் தொடர்ச்சியான இந்த பாதிப்பு தொடர்பாக எந்த விதமான பேச்சுகள் அவர்களுக்கு செயற்பாட்டு வாயிலாக அந்த உறவை கட்டி எழுப்பக்கூடிய எந்த செயற்பாடுகளும் இந்த நிகழ்வுகளில் நடைபெறுகின்றதா ?
இலங்கையில் இருந்து கலந்து கொண்டுள்ள செந்தில் தொண்டமான் அவர்கள் இலங்கை சார்ந்து சென்றாலும் மலையும் சார்ந்த செல்கின்றார். மலையகம் சார்ந்த விஷயங்களை அவர் முன்னிலைப் படுத்துகின்றார் .வடக்கு சார்ந்த மீனவர்கள், வடக்கு,கிழக்கில்
இருக்கின்ற மக்கள் தொடர்பாக பேசுவதற்கு அவர் அச்சப் படுகின்றார். அல்லது பேசாமல் தவிர்த்து வருகிறார்.
எனவே இலங்கையில் இருந்து செல்கின்ற பிரதிநிதிகளை நாங்கள் இலங்கை பிரதிநிதிகளாக பார்க்கிறோம்.எனவே அவர் இங்குள்ள விடையங்களை முன்னுரிமைப் படுத்த வேண்டும்.அயலகத் தமிழர் தினம் என்கிற சொல்லை நாங்கள் வரவேற்றாலும்,வட பகுதி மீனவர்களின் நலனும் அதில் உள்வாங்கப்பட வேண்டும்.
தமிழகத்தினால் இழைக்கப் படுகின்ற அநீதிக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது.வெறுமனே தமிழக உறவை மாத்திரம் பயன்படுத்தி தமிழகத்திற்கும்,தமிழ் மக்களுக்குமான மொழி உறவை ஊக்கப் படுத்துகின்ற அதே நேரம் இங்கு மக்கள் படுகின்ற துன்பங்களையும் அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தொழில் நடவடிக்கைகள் இன்றி வீடுகளில் முடங்கி உள்ளனர்.அவர்களுக்கான எந்த இழப்பீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை.ஒரு சில உதவிகள் வழங்கப்பட்டாலும் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை.
மக்கள் அரசாங்கத்தின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஓய்வெடுக்கும் நிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் எமது கடற்பகுதிக்குள் வந்து சூறை யாடுகின்ற செயல்பாடு இன்று வரை தொடர்கிறது.
வெறுமனே ஒரு சில படகுகள் கைது செய்யப்பட்டாலும்,அவர்களின் வருகையை இன்று வரை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
அவர்களை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணம் தமிழக முதல்வரை சேரும். அவர் தான் இத்தொழிலை ஊக்குவித்து வருகிறார் என வட பகுதி மீனவர்கள் கருதுகின்றனர்.
எனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லை யை தாண்டாது இருக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள் வரவேற்றாலும் ,வட பகுதி மீனவர்களின் நலனும் அதில் உள்வாங்கப்பட வேண்டும்- என்.எம்.ஆலம் அயலகத் தமிழர் தினம் என்ற நிகழ்வை நாங்கள் வரவேற்றாலும் வட பகுதி மீனவர்களின் நலனும் அதில் உள்வாங்கப்பட வேண்டும். இன்று வரை தமிழக மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.அதற்கு காரணம் தமிழக முதல்வரை சேரும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழகத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தினம் என்ற நிகழ்வு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் விமர்சையாக நடைபெற்றிருக்கின்றது. இலங்கையில் இருந்து அதற்கான பிரதிநிதிகள் சென்றிருக்கின்றார்கள் பல விடயங்கள் குறிப்பாக தமிழால் இணைகின்ற பல விடையங்கள் அங்கு இடம் பெற்றுள்ளது.இது காலத்தின் தேவையாகும்,உண்மையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தான் தமிழ் என்ற உணர்வையும் தமிழோடு இணைய வேண்டும் என்ற அந்த ஆசையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருந்தது.உண்மையில் இரு நாட்டை நாங்கள் எடுத்துக் கொண்டால் தமிழால் இணைவோம் என்பதற்கு பொருத்தமான நாடாக தமிழகத்துக்கும் வடபகுதிக்கும் நிறைய உறவு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு தமிழால் இணையக் கூடிய வகையில் எந்த நாடுகளும் இல்லை.இலங்கைக்கு தான் அந்த வார்த்தை பொருத்தமானது.எனவே நான் கூற வருகின்ற விடயம் இந்த தமிழால் இணைவோம் என்பது வார்த்தை. உண்மையில் பாராட்ட கூடியதாக இருந்தாலும் தமிழால் நாங்கள் இணைந் திருக்கின்றோமாதமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்களுக்கும் இலங்கை வடபகுதியில் இருக்கும் தமிழர்களுக்குமான உறவு தொப்புள் கொடி உறவு என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த உறவு ரீதியாக இது ஒரு அரசியலுக்கும் மொழிக்குமானது அல்ல .அதையும் தாண்டி வாழ்வாதாரம் ஒன்றிணைவு அவர்களின் குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் அதன் ஊடாக பார்க்கப்பட வேண்டியதொன்றாகும்.இருந்த போதும் இங்கு நடைபெறுகின்ற விடயம் தமிழக மீனவர்களால் வடபகுதியில் இருக்கும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.இந்த நிகழ்வு தொடர்ச்சியாக பல வருடங்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் தொடர்ச்சியான இந்த பாதிப்பு தொடர்பாக எந்த விதமான பேச்சுகள் அவர்களுக்கு செயற்பாட்டு வாயிலாக அந்த உறவை கட்டி எழுப்பக்கூடிய எந்த செயற்பாடுகளும் இந்த நிகழ்வுகளில் நடைபெறுகின்றதா இலங்கையில் இருந்து கலந்து கொண்டுள்ள செந்தில் தொண்டமான் அவர்கள் இலங்கை சார்ந்து சென்றாலும் மலையும் சார்ந்த செல்கின்றார். மலையகம் சார்ந்த விஷயங்களை அவர் முன்னிலைப் படுத்துகின்றார் .வடக்கு சார்ந்த மீனவர்கள், வடக்கு,கிழக்கில் இருக்கின்ற மக்கள் தொடர்பாக பேசுவதற்கு அவர் அச்சப் படுகின்றார். அல்லது பேசாமல் தவிர்த்து வருகிறார்.எனவே இலங்கையில் இருந்து செல்கின்ற பிரதிநிதிகளை நாங்கள் இலங்கை பிரதிநிதிகளாக பார்க்கிறோம்.எனவே அவர் இங்குள்ள விடையங்களை முன்னுரிமைப் படுத்த வேண்டும்.அயலகத் தமிழர் தினம் என்கிற சொல்லை நாங்கள் வரவேற்றாலும்,வட பகுதி மீனவர்களின் நலனும் அதில் உள்வாங்கப்பட வேண்டும்.தமிழகத்தினால் இழைக்கப் படுகின்ற அநீதிக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது.வெறுமனே தமிழக உறவை மாத்திரம் பயன்படுத்தி தமிழகத்திற்கும்,தமிழ் மக்களுக்குமான மொழி உறவை ஊக்கப் படுத்துகின்ற அதே நேரம் இங்கு மக்கள் படுகின்ற துன்பங்களையும் அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தொழில் நடவடிக்கைகள் இன்றி வீடுகளில் முடங்கி உள்ளனர்.அவர்களுக்கான எந்த இழப்பீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை.ஒரு சில உதவிகள் வழங்கப்பட்டாலும் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை.மக்கள் அரசாங்கத்தின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஓய்வெடுக்கும் நிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் எமது கடற்பகுதிக்குள் வந்து சூறை யாடுகின்ற செயல்பாடு இன்று வரை தொடர்கிறது.வெறுமனே ஒரு சில படகுகள் கைது செய்யப்பட்டாலும்,அவர்களின் வருகையை இன்று வரை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.அவர்களை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணம் தமிழக முதல்வரை சேரும். அவர் தான் இத்தொழிலை ஊக்குவித்து வருகிறார் என வட பகுதி மீனவர்கள் கருதுகின்றனர்.எனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லை யை தாண்டாது இருக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.