• May 10 2024

பயங்கரவாத செயல்களில் பொலிசாரே ஈடுபடுகின்றனர் - அமலநாயகி குற்றச்சாட்டு..!

Chithra / Jan 12th 2024, 8:32 am
image

Advertisement

பயங்கரவாத செயல்களில் நாங்கள் ஈடுபடுகின்றோம் என்பது போலீசாரின் குற்றச்சாட்டு. ஆனால் இங்கே பயங்கரவாத செயல்களை செய்வது இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டி எனப்படுபவர்கள் ஈடுபடுகின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

கடந்த வாரம் ஜனாதிபதியின் வவுனியா விஜியத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர் அதிலும் குறிப்பாக ஒரு கணவனை தேடி அலையும் போது ஒரு பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றார்கள.

 இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை. நாங்கள் எங்களுடைய உறவுகளை கேட்டுத்தான் இந்த போராட்டங்களை செய்து வருகின்றோம் அந்த வகையில் பயங்கரவாத செயல்களில் நாங்கள் ஈடுபடுகின்றோம் என்பது தான் போலீசாரின் குற்றச்சாட்டு.

ஆனால் இங்கே பயங்கரவாத செயல்களை செய்வது இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டி எனப்படுபவர்கள் தான் பயங்கரவாத செயல்களை செய்கின்றார்கள்.

இலங்கை அரசாங்கத்தால் எந்த ஒரு பிரயோசனமும் எங்களுக்கு இல்லை காலங்கள் கடந்து செல்கின்றது 33 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினால் எதுவித தீர்வும் எட்டாத நிலையிலேயே நாங்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் இலங்கை அரசினால் அலுவலகங்களை உருவாக்குகிறார்கள் உருவாக்கி வெளிநாடுகளுக்கு சொல்லப்படுகின்ற ஒரு விடயம் என்னவென்றால் நாங்கள் உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக இவர்களுக்கான தீர்வு பெற்று தருவோம் என்று ஆனால் உண்மை அது இல்லை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓ எம் பி அலுவலகத்தை கொண்டு வருவார்கள் இப்போது ஒரு அலுவலகத்தை கொண்டு வரப் போகின்றார்கள் இவ்வாறு காலங்களை கடத்தி 33 வருடங்கள் சென்று விட்டது இலங்கை அரசாங்கத்தினால் எந்த ஒரு தீர்வு தராத பட்சத்தில் தான் நாங்கள் சர்வதேசத்தை நாடியிருக்கின்றோம்.

பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்ற பட்சத்திலே ஜனாதிபதிக்கு  இந்த அவலங்களை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம் வீடியோவில் இருந்து அதை ஒரு அடாவடித்தனமாக எங்களை தூண்டிவிட்டு வன்முறைக்கு உட்படுத்தி ஒரு பெண், 

ஒரு தாய் என்று பார்க்காமல் கைது செய்து அடைத்திருக்கிறார்கள் உடனடியாக சர்வதேச நாடுகளும் முன்வந்து அவரின் விடுதலையை வலியுறுத்தி உடனடியாக அந்த பெண்ணை விடுதலை செய்ய வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

அடாவடித்தனம் என்னும் போது நாங்கள் பொதுசொத்துக்கு எதிராக செயல்படுவதில்லை ஒவ்வொரு ஊடகமும் வெளியிடும் செய்திகளை பார்த்தால் பொது போக்குவரத்துக்கு தடை செய்வது போலீசார் தான் அவர்கள்தான் அந்த அடாவடித்தனமான வேலையே செய்கின்றார்கள் நாங்கள் மக்கள் நமது உரிமையை தான் கேட்டு நிற்கின்றோம் ஆனால் நாங்கள் அந்த உரிமையை கேட்டு நிற்கும் போது எமது வீட்டுக்கு தேடி வருகின்றார்கள் எம்மை பயங்கரவாதியா காட்டுகின்றார்கள் குற்றவாளியாக எங்களை காட்டுகின்றார்கள்.

உண்மையில் நாங்கள் கேட்கின்றோம் இந்த 14 வருடங்களில் எனது கணவர் இந்த மரப்பாலத்தில் இருந்த எஸ் டி எப் கேம்ப் ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றிருந்தார்கள் என்று சொல்லி நான் கேட்டேன் இந்த 14 வருடங்களில் எனது கணவரை தேடி எனது வீட்டிற்கு போலீசார் டி.ஐ.டி மற்றும் சிஐடி அனைவரும் விசாரணைக்கு வருகின்றார்கள் வந்து எனது கணவரை பற்றிய தகவல்களையும் கேட்கின்றார்கள் எனது தகவலை கேட்கின்றார்கள் அவர்களின் உறவினர்கள் தாய் தம்பி சகலரி விடயங்களையும் கேட்கின்றார்கள்.

அது மாத்திரம் இன்றி எனது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்ன வேலை செய்கின்றார்கள் எனது மருமக்கள் என்ன செய்கின்றார்கள் அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்று பல விபரங்களை பெற்று செல்கின்றார்கள்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கொடுத்திருக்கின்றோம் எங்களுடைய பிள்ளைகளை கணவன்மார்களை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தாருங்கள் என்று இதற்கான பொறுப்பை கூறுங்கள் என்று ஆனால் அவர்கள் இவ்வாறான ஒரு விஷயத்தையும் எங்களிடம் மறைமுகமாகவோ நேரடியாகவும் இரவு வேளையிலும் வந்து விசாரணை விசாரணை என்கின்ற போர்வையில் எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதில் யார் பயங்கரவாத செயல்களை செய்கின்றார்கள் இலங்கை போலீசாரும் அதற்கான சி.ஐ. மற்றும் டி.ஐ.டி.

இத்தனை வருடத்திற்கும் எனது கணவனை கடத்தி சென்ற நந்தன எனப்படும் நபர் தாண்டியடி முகாமில் இருக்கின்றார் நான் ஒரு தனி பெண்ணாக இவ்வாறெல்லாம் இருக்கின்றார்கள் நான் தேடி சேகரித்து அளவிற்கு ஏன் இந்த இலங்கை போலீசார் எங்களை துரத்தி எங்களை விசாரித்து எங்களை பயங்கரவாதியாக  காட்ட நினைப்பவர்கள் இன்று போலீசார் சம்பந்தப்பட்டு நபரை தேட முடியாது காரணம் என்ன குற்றம் செய்யச் சொன்னவர்கள் அவர்களே குற்றம் செய்தவர்களும் அவர்களே எங்களை குற்றவாளிகளாக சென்று நீதி கேட்க முடியாது இந்த 34 வருடங்களாக கேட்டு நாங்கள் தோல்வியுற்று விட்டோம் இதனால் தான் நாங்கள் சர்வதேசத்தை அன்டி நிற்கின்றோம்.

எனவே சர்வதேச நாடுகள் முன்வந்து எங்களுடைய இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எங்களுடைய உறவுகளுக்கான என்ன நடந்தது என்கின்ற பொறுப்பு கூறலை உறுதிப்படுத்த வைக்க வேண்டியது சர்வதேச நாடுகளின் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் எந்த ஒரு துளி நம்பிக்கை கூட நமக்கு இல்லை.

இவ்வாறாக இன்று ஜெனிதாவை கைது செய்தது போல நாளை எங்களையும் கைது செய்யப்படலாம் எங்களையும் அடித்து வீதி ஓரங்களில் துன்புறுத்தி கடந்த காலங்களில் இடம்பெற்றது ஜனாதிபதி கொடுக்கின்ற பாதுகாப்பு எங்களை போன்ற பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு இங்கு ஒரு பாதுகாப்பும் இல்லை.

செங்கலடி பகுதியில் ஜனாதிபதி வருகை தந்த நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எங்களை தாக்கினார்கள் போலீசார்.

உலகளாவிய தமிழ் மக்கள் எல்லாரும் சேர்ந்து சர்வதேச நாடுகளும் சேர்ந்து இனியாவது எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.

உடனடியாக இந்த ஜெனித்தா என்கின்ற சகோதரியை விடுதலை செய்வதற்கு எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் இனிமேல் இவ்வாறான துன்ப துயரங்கள் நடக்காமல் பாதுகாக்க வேண்டியது சர்வதேச நாடுகள் காலம் தாழ்த்தி செல்லச் செல்ல குரல் நசுக்கப்பட்டு இனிமேல் நாங்கள் உயிரோடு இல்லாமல் போகும் சூழல் வருகின்றது.

இதுவரை பல தரப்பட்ட தாய்மார்களை நாங்கள் இழந்து நிற்கின்றோம் அதேபோல எங்களையும் இல்லாமல் செய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது நீங்கள் மௌனமாக இருக்க ஒவ்வொருத்தராக நாங்கள் அழிந்து செல்வோம்.

உடனடியாக இவர்களுக்கு விடுதலை வேண்டும் அவரும் தனது கணவரை தொலைத்து விட்டு தேடுகின்ற ஒரு பெண் இவர் சிறைச்சாலையில் இருக்கின்றார் அவருக்காக மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக இலங்கை அரசாங்கம் இந்த பெண்ணுக்கு விடுதலை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம்.


பயங்கரவாத செயல்களில் பொலிசாரே ஈடுபடுகின்றனர் - அமலநாயகி குற்றச்சாட்டு. பயங்கரவாத செயல்களில் நாங்கள் ஈடுபடுகின்றோம் என்பது போலீசாரின் குற்றச்சாட்டு. ஆனால் இங்கே பயங்கரவாத செயல்களை செய்வது இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டி எனப்படுபவர்கள் ஈடுபடுகின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்தார்.மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,கடந்த வாரம் ஜனாதிபதியின் வவுனியா விஜியத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர் அதிலும் குறிப்பாக ஒரு கணவனை தேடி அலையும் போது ஒரு பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றார்கள. இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை. நாங்கள் எங்களுடைய உறவுகளை கேட்டுத்தான் இந்த போராட்டங்களை செய்து வருகின்றோம் அந்த வகையில் பயங்கரவாத செயல்களில் நாங்கள் ஈடுபடுகின்றோம் என்பது தான் போலீசாரின் குற்றச்சாட்டு.ஆனால் இங்கே பயங்கரவாத செயல்களை செய்வது இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டி எனப்படுபவர்கள் தான் பயங்கரவாத செயல்களை செய்கின்றார்கள்.இலங்கை அரசாங்கத்தால் எந்த ஒரு பிரயோசனமும் எங்களுக்கு இல்லை காலங்கள் கடந்து செல்கின்றது 33 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினால் எதுவித தீர்வும் எட்டாத நிலையிலேயே நாங்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.அந்த வகையில் இலங்கை அரசினால் அலுவலகங்களை உருவாக்குகிறார்கள் உருவாக்கி வெளிநாடுகளுக்கு சொல்லப்படுகின்ற ஒரு விடயம் என்னவென்றால் நாங்கள் உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக இவர்களுக்கான தீர்வு பெற்று தருவோம் என்று ஆனால் உண்மை அது இல்லை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓ எம் பி அலுவலகத்தை கொண்டு வருவார்கள் இப்போது ஒரு அலுவலகத்தை கொண்டு வரப் போகின்றார்கள் இவ்வாறு காலங்களை கடத்தி 33 வருடங்கள் சென்று விட்டது இலங்கை அரசாங்கத்தினால் எந்த ஒரு தீர்வு தராத பட்சத்தில் தான் நாங்கள் சர்வதேசத்தை நாடியிருக்கின்றோம்.பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்ற பட்சத்திலே ஜனாதிபதிக்கு  இந்த அவலங்களை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம் வீடியோவில் இருந்து அதை ஒரு அடாவடித்தனமாக எங்களை தூண்டிவிட்டு வன்முறைக்கு உட்படுத்தி ஒரு பெண், ஒரு தாய் என்று பார்க்காமல் கைது செய்து அடைத்திருக்கிறார்கள் உடனடியாக சர்வதேச நாடுகளும் முன்வந்து அவரின் விடுதலையை வலியுறுத்தி உடனடியாக அந்த பெண்ணை விடுதலை செய்ய வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.அடாவடித்தனம் என்னும் போது நாங்கள் பொதுசொத்துக்கு எதிராக செயல்படுவதில்லை ஒவ்வொரு ஊடகமும் வெளியிடும் செய்திகளை பார்த்தால் பொது போக்குவரத்துக்கு தடை செய்வது போலீசார் தான் அவர்கள்தான் அந்த அடாவடித்தனமான வேலையே செய்கின்றார்கள் நாங்கள் மக்கள் நமது உரிமையை தான் கேட்டு நிற்கின்றோம் ஆனால் நாங்கள் அந்த உரிமையை கேட்டு நிற்கும் போது எமது வீட்டுக்கு தேடி வருகின்றார்கள் எம்மை பயங்கரவாதியா காட்டுகின்றார்கள் குற்றவாளியாக எங்களை காட்டுகின்றார்கள்.உண்மையில் நாங்கள் கேட்கின்றோம் இந்த 14 வருடங்களில் எனது கணவர் இந்த மரப்பாலத்தில் இருந்த எஸ் டி எப் கேம்ப் ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றிருந்தார்கள் என்று சொல்லி நான் கேட்டேன் இந்த 14 வருடங்களில் எனது கணவரை தேடி எனது வீட்டிற்கு போலீசார் டி.ஐ.டி மற்றும் சிஐடி அனைவரும் விசாரணைக்கு வருகின்றார்கள் வந்து எனது கணவரை பற்றிய தகவல்களையும் கேட்கின்றார்கள் எனது தகவலை கேட்கின்றார்கள் அவர்களின் உறவினர்கள் தாய் தம்பி சகலரி விடயங்களையும் கேட்கின்றார்கள்.அது மாத்திரம் இன்றி எனது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்ன வேலை செய்கின்றார்கள் எனது மருமக்கள் என்ன செய்கின்றார்கள் அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்று பல விபரங்களை பெற்று செல்கின்றார்கள்.நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கொடுத்திருக்கின்றோம் எங்களுடைய பிள்ளைகளை கணவன்மார்களை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தாருங்கள் என்று இதற்கான பொறுப்பை கூறுங்கள் என்று ஆனால் அவர்கள் இவ்வாறான ஒரு விஷயத்தையும் எங்களிடம் மறைமுகமாகவோ நேரடியாகவும் இரவு வேளையிலும் வந்து விசாரணை விசாரணை என்கின்ற போர்வையில் எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.இதில் யார் பயங்கரவாத செயல்களை செய்கின்றார்கள் இலங்கை போலீசாரும் அதற்கான சி.ஐ. மற்றும் டி.ஐ.டி.இத்தனை வருடத்திற்கும் எனது கணவனை கடத்தி சென்ற நந்தன எனப்படும் நபர் தாண்டியடி முகாமில் இருக்கின்றார் நான் ஒரு தனி பெண்ணாக இவ்வாறெல்லாம் இருக்கின்றார்கள் நான் தேடி சேகரித்து அளவிற்கு ஏன் இந்த இலங்கை போலீசார் எங்களை துரத்தி எங்களை விசாரித்து எங்களை பயங்கரவாதியாக  காட்ட நினைப்பவர்கள் இன்று போலீசார் சம்பந்தப்பட்டு நபரை தேட முடியாது காரணம் என்ன குற்றம் செய்யச் சொன்னவர்கள் அவர்களே குற்றம் செய்தவர்களும் அவர்களே எங்களை குற்றவாளிகளாக சென்று நீதி கேட்க முடியாது இந்த 34 வருடங்களாக கேட்டு நாங்கள் தோல்வியுற்று விட்டோம் இதனால் தான் நாங்கள் சர்வதேசத்தை அன்டி நிற்கின்றோம்.எனவே சர்வதேச நாடுகள் முன்வந்து எங்களுடைய இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எங்களுடைய உறவுகளுக்கான என்ன நடந்தது என்கின்ற பொறுப்பு கூறலை உறுதிப்படுத்த வைக்க வேண்டியது சர்வதேச நாடுகளின் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் எந்த ஒரு துளி நம்பிக்கை கூட நமக்கு இல்லை.இவ்வாறாக இன்று ஜெனிதாவை கைது செய்தது போல நாளை எங்களையும் கைது செய்யப்படலாம் எங்களையும் அடித்து வீதி ஓரங்களில் துன்புறுத்தி கடந்த காலங்களில் இடம்பெற்றது ஜனாதிபதி கொடுக்கின்ற பாதுகாப்பு எங்களை போன்ற பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு இங்கு ஒரு பாதுகாப்பும் இல்லை.செங்கலடி பகுதியில் ஜனாதிபதி வருகை தந்த நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எங்களை தாக்கினார்கள் போலீசார்.உலகளாவிய தமிழ் மக்கள் எல்லாரும் சேர்ந்து சர்வதேச நாடுகளும் சேர்ந்து இனியாவது எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.உடனடியாக இந்த ஜெனித்தா என்கின்ற சகோதரியை விடுதலை செய்வதற்கு எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் இனிமேல் இவ்வாறான துன்ப துயரங்கள் நடக்காமல் பாதுகாக்க வேண்டியது சர்வதேச நாடுகள் காலம் தாழ்த்தி செல்லச் செல்ல குரல் நசுக்கப்பட்டு இனிமேல் நாங்கள் உயிரோடு இல்லாமல் போகும் சூழல் வருகின்றது.இதுவரை பல தரப்பட்ட தாய்மார்களை நாங்கள் இழந்து நிற்கின்றோம் அதேபோல எங்களையும் இல்லாமல் செய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது நீங்கள் மௌனமாக இருக்க ஒவ்வொருத்தராக நாங்கள் அழிந்து செல்வோம்.உடனடியாக இவர்களுக்கு விடுதலை வேண்டும் அவரும் தனது கணவரை தொலைத்து விட்டு தேடுகின்ற ஒரு பெண் இவர் சிறைச்சாலையில் இருக்கின்றார் அவருக்காக மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக இலங்கை அரசாங்கம் இந்த பெண்ணுக்கு விடுதலை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம்.

Advertisement

Advertisement

Advertisement