• Jan 07 2025

யாழில் வியக்கவைத்த கஜமுக சூரசம்ஹாரம்! குவிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்

Chithra / Jan 5th 2025, 9:16 am
image



யாழ்ப்பாணம் - மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுக சூரசம்கார உற்சவம் நேற்று  மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

விநாயகர் விரதத்தின் 20ம் நாளான நேற்று, பி.ப 3.30 மணிக்கு அபிஷேகத்துடன் கிரியைகள் ஆரம்பமாகின. 

அதனைத் தொடர்ந்து விசேட ஹோமப் பூசைகள், வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றதுடன் மாலை கஜமுகசங்காரம் நடைபெற்றது.

இதன்போது பாரம்பரிய மானாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், சிலம்பம், பொய்க்கால் நடனம்,  மற்றும் கரகம் என்பன நடைபெற்றன.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசங்காரத்தை கண்டுகளித்ததுடன், விநாயகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.


இதேவேளை யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுகசங்கார உற்சவம் நேற்று  மாலை 4.00 மணியளவில்  நடைபெற்றது.

விநாயகர் விரதத்தின் 20 ம் நாளான நேற்று இலட்சார்ச்சனை நிறைவு உற்சவம், விசேட ஹோமப் பூசைகள் நடைபெற்றதுடன் மாலை கஜமுகசங்காரம் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசங்காரத்தை கண்டு களித்தமை குறிப்பிடத்தக்கது.


யாழில் வியக்கவைத்த கஜமுக சூரசம்ஹாரம் குவிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் யாழ்ப்பாணம் - மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுக சூரசம்கார உற்சவம் நேற்று  மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.விநாயகர் விரதத்தின் 20ம் நாளான நேற்று, பி.ப 3.30 மணிக்கு அபிஷேகத்துடன் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து விசேட ஹோமப் பூசைகள், வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றதுடன் மாலை கஜமுகசங்காரம் நடைபெற்றது.இதன்போது பாரம்பரிய மானாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், சிலம்பம், பொய்க்கால் நடனம்,  மற்றும் கரகம் என்பன நடைபெற்றன.நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசங்காரத்தை கண்டுகளித்ததுடன், விநாயகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.இதேவேளை யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுகசங்கார உற்சவம் நேற்று  மாலை 4.00 மணியளவில்  நடைபெற்றது.விநாயகர் விரதத்தின் 20 ம் நாளான நேற்று இலட்சார்ச்சனை நிறைவு உற்சவம், விசேட ஹோமப் பூசைகள் நடைபெற்றதுடன் மாலை கஜமுகசங்காரம் நடைபெற்றது.நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசங்காரத்தை கண்டு களித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement