நோயாளருடன் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதி நொருங்கியுள்ளது.
இந்த கோர விபத்துச் சம்பவம் கேரள மாநிலம் திருச்சூரில் இடம்பெற்றுள்ளது.
திருச்சூரில் உள்ள சாலையொன்றில் வேகமாக வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டி அதே சாலையில் எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த அம்புலன்ஸ் வண்டி காருடன் மோதி நொருங்கிய பின் அவ்வழியே வந்த பயணிகள் ஓடிச் சென்று வாகனங்களில் இருந்தவர்களை மீட்டனர்.
எனினும் விபத்தில் நோயாளர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி நொருங்கிய காட்சி அருகிலுள்ள சிசிரிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் நேருக்கு நேர் மோதி நொருங்கிய அம்புலன்ஸ் - கார்; இருவர் பலி - ஐவர் படுகாயம் நோயாளருடன் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதி நொருங்கியுள்ளது. இந்த கோர விபத்துச் சம்பவம் கேரள மாநிலம் திருச்சூரில் இடம்பெற்றுள்ளது. திருச்சூரில் உள்ள சாலையொன்றில் வேகமாக வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டி அதே சாலையில் எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த அம்புலன்ஸ் வண்டி காருடன் மோதி நொருங்கிய பின் அவ்வழியே வந்த பயணிகள் ஓடிச் சென்று வாகனங்களில் இருந்தவர்களை மீட்டனர்.எனினும் விபத்தில் நோயாளர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி நொருங்கிய காட்சி அருகிலுள்ள சிசிரிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.