• Nov 07 2024

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி மீண்டும் பொதுச் சேவைக்கு...!

Sharmi / Nov 6th 2024, 10:59 am
image

Advertisement

பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி தலைமையில் இன்று (06) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரியினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் அதற்கான ஆவணங்கள் மற்றும் திறப்புகள் இதன்போது கையளிக்கப்பட்டன. 

அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய இந்த பிரிவிடம் காணப்பட்ட மனிதவள மற்றும் பௌதீக வளங்கள் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை பொதுமக்களின் சுகாதார தேவைகளுக்கென பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி மீண்டும் பொதுச் சேவைக்கு. பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி தலைமையில் இன்று (06) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரியினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் அதற்கான ஆவணங்கள் மற்றும் திறப்புகள் இதன்போது கையளிக்கப்பட்டன. அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய இந்த பிரிவிடம் காணப்பட்ட மனிதவள மற்றும் பௌதீக வளங்கள் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை பொதுமக்களின் சுகாதார தேவைகளுக்கென பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement