• Nov 24 2024

யாழ்.மாவட்டத்துக்கு கொண்டு வந்த விதை உருளைக்கிழங்குகளில் ஒவ்வாத பக்ரீரியாக்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன்...!samumugammedia

Anaath / Dec 20th 2023, 7:39 pm
image

விவசாய அமைச்சினால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விதை  உருளைக்கிழங்குகளில் இலங்கை மண்ணுக்கே  ஒவ்வாத பாக்டீரியாக்கள் உள்ளடங்கியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுரேஷ் பிரேமச்சந்ந்திரன் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஏறத்தாழ 23000 kg நிறையுள்ள 1கோடியே 65 லட்சம் பெறுமதியான விதை உருளைக்கிழங்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது விவசாய அமைச்சினால் மானிய விலையில் இங்குள்ள விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு கொண்டுவரப்பட்டவை இலங்கைக்கு ஒவ்வாத அல்லது எங்கள் மண்ணுக்கு ஒவ்வாத பற்றீரியாக்களை  கொண்டிருந்ததாகவும், அத்துடன் உருளைக்கிழங்கு விதைகள் அழுகிய நிலையில் இருப்பதாகவும், அதை மக்களுக்கு விநியோகிக்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், விவசாய விரிவாக்க உத்தியோகத்தரால் அரசாங்கத்துக்கு சொல்லப்பட்டது. இவை அவுஸ்ரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டது. 

இவற்றை நேரடியாக விவசாய அமைச்சு இறக்குமதி செய்ததா? அல்லது முகவர் மூலம் இறக்குமதி செய்ததா? என்பது விவசாய அமைச்சுக்கு தான் தெரியும். இவை வேறு வேறு மாவட்டங்களுக்கு அனுப்பபட்டுள்ளதா? என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் யாழ் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டவை மிக மோசமாக, பாவிக்கப்பட்ட முடியாத  நிலையில் இருந்தன. இவற்றை இவர்கள் எவ்வாறு இறக்குமதி செய்தார்கள்? இது ஒரு மோசமான முன்னுதாரணம்.  இதற்கு செலவு செய்யப்பட்ட பணம் என்பது எந்த விதத்திலும் பிரயோசனம் இல்லாதது மட்டுமல்ல எமது மண்ணை அழிக்க கூடியதாகவும் உள்ளது. இதே போல சீனாவிலிருந்து முன்னர் கொண்டுவரப்பட்ட உரம் சேதன உரம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது. 

எனவே  இவ்வாறான சூழ்நிலையில் இறக்குமதி செய்கின்ற விவசாய பொருட்கள் தகுந்த முறையில் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதனை அரசாங்கம் சரியான முறையில் செய்யாமல் விடுவது மோசமான பொருளாதார நிலைக்கு இட்டுச்செல்லும். இதனால் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தவறிழைக்கும் தரப்புகளுக்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்துக்கு கொண்டு வந்த விதை உருளைக்கிழங்குகளில் ஒவ்வாத பக்ரீரியாக்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன்.samumugammedia விவசாய அமைச்சினால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விதை  உருளைக்கிழங்குகளில் இலங்கை மண்ணுக்கே  ஒவ்வாத பாக்டீரியாக்கள் உள்ளடங்கியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுரேஷ் பிரேமச்சந்ந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஏறத்தாழ 23000 kg நிறையுள்ள 1கோடியே 65 லட்சம் பெறுமதியான விதை உருளைக்கிழங்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது விவசாய அமைச்சினால் மானிய விலையில் இங்குள்ள விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு கொண்டுவரப்பட்டவை இலங்கைக்கு ஒவ்வாத அல்லது எங்கள் மண்ணுக்கு ஒவ்வாத பற்றீரியாக்களை  கொண்டிருந்ததாகவும், அத்துடன் உருளைக்கிழங்கு விதைகள் அழுகிய நிலையில் இருப்பதாகவும், அதை மக்களுக்கு விநியோகிக்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், விவசாய விரிவாக்க உத்தியோகத்தரால் அரசாங்கத்துக்கு சொல்லப்பட்டது. இவை அவுஸ்ரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டது. இவற்றை நேரடியாக விவசாய அமைச்சு இறக்குமதி செய்ததா அல்லது முகவர் மூலம் இறக்குமதி செய்ததா என்பது விவசாய அமைச்சுக்கு தான் தெரியும். இவை வேறு வேறு மாவட்டங்களுக்கு அனுப்பபட்டுள்ளதா என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் யாழ் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டவை மிக மோசமாக, பாவிக்கப்பட்ட முடியாத  நிலையில் இருந்தன. இவற்றை இவர்கள் எவ்வாறு இறக்குமதி செய்தார்கள் இது ஒரு மோசமான முன்னுதாரணம்.  இதற்கு செலவு செய்யப்பட்ட பணம் என்பது எந்த விதத்திலும் பிரயோசனம் இல்லாதது மட்டுமல்ல எமது மண்ணை அழிக்க கூடியதாகவும் உள்ளது. இதே போல சீனாவிலிருந்து முன்னர் கொண்டுவரப்பட்ட உரம் சேதன உரம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது. எனவே  இவ்வாறான சூழ்நிலையில் இறக்குமதி செய்கின்ற விவசாய பொருட்கள் தகுந்த முறையில் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதனை அரசாங்கம் சரியான முறையில் செய்யாமல் விடுவது மோசமான பொருளாதார நிலைக்கு இட்டுச்செல்லும். இதனால் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தவறிழைக்கும் தரப்புகளுக்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement