• Nov 26 2024

அம்பாறை இரட்டை படுகொலை சம்பவம்...! சந்தேக நபரான தந்தைக்கு விளக்கமறியல் நீடிப்பு...!

Sharmi / Mar 28th 2024, 4:37 pm
image

அம்பாறை மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்திவைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று (28)  உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு தொடர்பில் இன்று (28) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் பெரிய நீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  அப்பிள்ளைகளின் தந்தை மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிவான்  நீதிவான் குறித்த  உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, 63 வயதுடைய குறித்த சம்பவத்தில் மரணமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தியின் பின்னணி

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 14 ஆம் திகதி அன்று தனது இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தையொருவர் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ தினமன்று காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

குறித்த சம்பவத்தில் 29 மற்றும்  15 வயதுடைய அவரது இரு பிள்ளைகளும் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.

மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




அம்பாறை இரட்டை படுகொலை சம்பவம். சந்தேக நபரான தந்தைக்கு விளக்கமறியல் நீடிப்பு. அம்பாறை மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்திவைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று (28)  உத்தரவிட்டுள்ளது.அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு தொடர்பில் இன்று (28) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் பெரிய நீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  அப்பிள்ளைகளின் தந்தை மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிவான்  நீதிவான் குறித்த  உத்தரவை பிறப்பித்துள்ளார்.குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, 63 வயதுடைய குறித்த சம்பவத்தில் மரணமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.செய்தியின் பின்னணிஅம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 14 ஆம் திகதி அன்று தனது இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தையொருவர் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.சம்பவ தினமன்று காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.குறித்த சம்பவத்தில் 29 மற்றும்  15 வயதுடைய அவரது இரு பிள்ளைகளும் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement