அபிவிருத்திகளில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(01) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முக்கியமானது கைத்தொழில்துறை. ஆனால் எமது நாட்டில் இறக்குமதிப் பொருட்களையே நம்புவதால் கைத்தொழில்துறை ஆரோக்கியமான நிலையில் இல்லை.
அதனால் கைத்தொழித்துறை வீழ்ச்சியடைந்து செல்கின்றது. தென்பகுதியிலுள்ள கைத்தொழில் துறைகளில் மட்டும் அமைச்சர்கள் அதிக அக்கறை எடுத்து முன்னேற்றுகின்றனர்.
எனவே விடயத்துடன் சமபந்தப்பட்ட அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணவீர மற்றும் சாமர சம்பத் ஆகியோர் வடக்கு மாகாணம் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏராளமான கைத்தொழில் துறைகள் இருந்தன. இப்போது அனைத்தும் செயலிழந்துள்ளன.
குறிப்பாக பரந்தன் இரசாயன தொழிற்சாலையிலிருந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, நீர்வேலி கண்ணாடித்தொழிற்சாலை என்று அலுமினியத்திலிருந்து தேங்காய் எண்ணெய்த் தொழிற்சாலை, ஓட்டுத்தொழிற்சாலை வரை பல தொழிற்சாலைகள் இருந்தன.
ஆனால் இன்று இவை இல்லை. வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம் முடிந்த 14 வருடங்களாகி விட்டபோதும் இவ்வாறான தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த வித நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. இங்கு ஓரவஞ்சனை காட்டப்படுகிறது.
உப்பளம் தொழிற்சாலை மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை விஸ்தரிக்க நாம் பலமுறை கேட்டிருந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இவற்றை ஆரம்பித்தால் எமது மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேலைவாய்ப்பு அவசியம். இவற்றுக்கு அரசிடம் நிதி இல்லை என்றால் முதலிடுவதற்கு வடக்கு, கிழக்கில் உள்ள பலர் தயாராகவுள்ளனர்.
ஆனால் இதுதொடர்பில் அரசிற்கு அக்கறை இல்லை. இதில் என்ன வேடிக்கை என்றால் அரச தொழிற்சாலைகள் இல்லை ஆனால் அதன் தலைமையகங்கள் மட்டும் உள்ளன. அமைச்சுகளிலும் அதற்கான பிரிவு உள்ளது என்றார்.
வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை - அங்கஜன் குற்றச்சாட்டு samugammedia அபிவிருத்திகளில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(01) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.பொருளாதார ரீதியில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முக்கியமானது கைத்தொழில்துறை. ஆனால் எமது நாட்டில் இறக்குமதிப் பொருட்களையே நம்புவதால் கைத்தொழில்துறை ஆரோக்கியமான நிலையில் இல்லை.அதனால் கைத்தொழித்துறை வீழ்ச்சியடைந்து செல்கின்றது. தென்பகுதியிலுள்ள கைத்தொழில் துறைகளில் மட்டும் அமைச்சர்கள் அதிக அக்கறை எடுத்து முன்னேற்றுகின்றனர்.எனவே விடயத்துடன் சமபந்தப்பட்ட அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணவீர மற்றும் சாமர சம்பத் ஆகியோர் வடக்கு மாகாணம் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏராளமான கைத்தொழில் துறைகள் இருந்தன. இப்போது அனைத்தும் செயலிழந்துள்ளன.குறிப்பாக பரந்தன் இரசாயன தொழிற்சாலையிலிருந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, நீர்வேலி கண்ணாடித்தொழிற்சாலை என்று அலுமினியத்திலிருந்து தேங்காய் எண்ணெய்த் தொழிற்சாலை, ஓட்டுத்தொழிற்சாலை வரை பல தொழிற்சாலைகள் இருந்தன.ஆனால் இன்று இவை இல்லை. வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம் முடிந்த 14 வருடங்களாகி விட்டபோதும் இவ்வாறான தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த வித நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. இங்கு ஓரவஞ்சனை காட்டப்படுகிறது.உப்பளம் தொழிற்சாலை மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை விஸ்தரிக்க நாம் பலமுறை கேட்டிருந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.இவற்றை ஆரம்பித்தால் எமது மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேலைவாய்ப்பு அவசியம். இவற்றுக்கு அரசிடம் நிதி இல்லை என்றால் முதலிடுவதற்கு வடக்கு, கிழக்கில் உள்ள பலர் தயாராகவுள்ளனர்.ஆனால் இதுதொடர்பில் அரசிற்கு அக்கறை இல்லை. இதில் என்ன வேடிக்கை என்றால் அரச தொழிற்சாலைகள் இல்லை ஆனால் அதன் தலைமையகங்கள் மட்டும் உள்ளன. அமைச்சுகளிலும் அதற்கான பிரிவு உள்ளது என்றார்.