• Nov 25 2024

மறைந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருக்கு அங்கஜன் இரங்கல்..!

Sharmi / Oct 23rd 2024, 2:34 pm
image

இனியவனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

 அங்கஜன் இராமநாதன் இன்றையதினம்(23)  வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எனது உடுப்பிட்டி தொகுதி இணைப்பாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான எனது அன்புச் சகோதரன் செந்திவேல் தமிழினியன் (இனியவன்) அவர்களின் மறைவுச் செய்தியை கலங்கிய மனதுடன் ஊடகங்களுக்கு அறியத்தருகிறேன்.

எனது அரசியல் பயணத்திற்கு பெரும் ஆதரவுத்தளத்தை உருவாக்கி அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வடமராட்சி மக்களுக்கான அபிவிருத்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என முழு ஈடுபாட்டுடன் இனியவன் செயற்பட்டு வந்தார். 

வடமராட்சியைச் சேர்ந்த அனைத்து மக்களாலும் இலகுவாக அணுகக்கூடியவராகும், மக்களின் தேவைகள் அறிந்தவராகவும் விளங்கிய அவர், நேரகாலம் பாராது மக்களுக்காகவும், மக்கள் அரசியலுக்காகவும் எம்மோடு பயணித்தவர். இளமைக்கேற்ற துடிப்போடு, எந்தச்சூழலிலும் அனைத்து தரப்பினரையும் அணுகி வடமராட்சி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் முனைப்போடு செயற்பட்டார்.

அவரது அர்ப்பணிப்பும், மக்கள் அவர் மீது கொண்ட விருப்புக்கும் அடையாளமாக 2018ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னதாக வல்வெட்டித்துறை நகர சபைக்கான உறுப்பினராக அவரை நியமித்திருந்தோம். அப்பதவியின் ஊடாக அவர் வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட கிராமங்களுக்கான அபிவிருத்தி தேவைகளை தனது இயலுமைக்கமைய செவ்வனே நிறைவேற்றியிருந்தார்.

அவற்றின் தொடர்ச்சியாக 2019 கொவிட் பெருந்தொற்றுக்காலத்தில் இரத்ததான நிகழ்வுகள், நிவாரணங்கள் வழங்கல், சிரமதான பணிகள் என பல்வேறுபட்ட பணிகளை அங்கஜன் இளைஞர் அணியூடாக வழிப்படுத்தியிருந்தார்.

2020 பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் பெருவெற்றியீட்டியதில் என்னோடு இணைந்து இனியவன் ஆற்றிய களப்பணிகள் ஏராளம். அவற்றை என்றும் என்னால் மறந்துவிட முடியாது. கடந்த காலத்தில் உடுப்பிட்டி பிரதேசத்தில் 28,000க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு பயனளிக்ககூடிய பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நாம் பெற்றுக்கொடுத்தபோது அவற்றை அம்மக்களிடம் கொண்டுசேர்த்ததிலும், அவற்றின் தொடர்ச்சிகளை கவனிப்பதிலும் காட்டிய அக்கறை மக்களாலும் நினைவில் கொள்ளப்படும்.

அதன் தொடர்ச்சியாகவே 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகளில் நாம் ஈடுபட்டபோது உடுப்பிட்டித் தொகுதி மக்களினது கோரிக்கைக்கமைய செந்திவேல் தமிழினியன் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 

தேர்தல் பிரச்சார காலத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று 23.10.2024 அதிகாலை எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். 

அவரது இழப்பு எனக்கும், எனது அணியினருக்கும் மட்டுமல்லாது வடமராட்சி மக்களுக்கும் பேரிழப்பாகும். சகோதரனாக, ஊரவனாக, அன்புக்குரிய தோழனாக அவரோடு இணைந்து செயற்பட்ட அனைவரோடும் நாம் இச்சந்தர்ப்பத்தில் துணைநிற்கிறோம். 

அன்னாரின் இழப்பையடுத்து, இன்றிலிருந்து அன்னாரின் இறுதிச்சடங்குகள் நிறைவடையும் வரை வடமராட்சி பிரதேசத்திற்கான எமது அனைத்து பிரச்சார நடவடிக்கைகளையும் இடைநிறுத்தம் செய்வதோடு, எனது பிரச்சார கூட்டங்களையும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளேன். 

மீண்டும் இத்துயரத் தருணத்தில் நாம் அனைவரும் அன்னாரின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரோடும் துணைநிற்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருக்கு அங்கஜன் இரங்கல். இனியவனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அங்கஜன் இராமநாதன் இன்றையதினம்(23)  வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,எனது உடுப்பிட்டி தொகுதி இணைப்பாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான எனது அன்புச் சகோதரன் செந்திவேல் தமிழினியன் (இனியவன்) அவர்களின் மறைவுச் செய்தியை கலங்கிய மனதுடன் ஊடகங்களுக்கு அறியத்தருகிறேன்.எனது அரசியல் பயணத்திற்கு பெரும் ஆதரவுத்தளத்தை உருவாக்கி அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வடமராட்சி மக்களுக்கான அபிவிருத்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என முழு ஈடுபாட்டுடன் இனியவன் செயற்பட்டு வந்தார். வடமராட்சியைச் சேர்ந்த அனைத்து மக்களாலும் இலகுவாக அணுகக்கூடியவராகும், மக்களின் தேவைகள் அறிந்தவராகவும் விளங்கிய அவர், நேரகாலம் பாராது மக்களுக்காகவும், மக்கள் அரசியலுக்காகவும் எம்மோடு பயணித்தவர். இளமைக்கேற்ற துடிப்போடு, எந்தச்சூழலிலும் அனைத்து தரப்பினரையும் அணுகி வடமராட்சி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் முனைப்போடு செயற்பட்டார்.அவரது அர்ப்பணிப்பும், மக்கள் அவர் மீது கொண்ட விருப்புக்கும் அடையாளமாக 2018ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னதாக வல்வெட்டித்துறை நகர சபைக்கான உறுப்பினராக அவரை நியமித்திருந்தோம். அப்பதவியின் ஊடாக அவர் வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட கிராமங்களுக்கான அபிவிருத்தி தேவைகளை தனது இயலுமைக்கமைய செவ்வனே நிறைவேற்றியிருந்தார்.அவற்றின் தொடர்ச்சியாக 2019 கொவிட் பெருந்தொற்றுக்காலத்தில் இரத்ததான நிகழ்வுகள், நிவாரணங்கள் வழங்கல், சிரமதான பணிகள் என பல்வேறுபட்ட பணிகளை அங்கஜன் இளைஞர் அணியூடாக வழிப்படுத்தியிருந்தார்.2020 பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் பெருவெற்றியீட்டியதில் என்னோடு இணைந்து இனியவன் ஆற்றிய களப்பணிகள் ஏராளம். அவற்றை என்றும் என்னால் மறந்துவிட முடியாது. கடந்த காலத்தில் உடுப்பிட்டி பிரதேசத்தில் 28,000க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு பயனளிக்ககூடிய பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நாம் பெற்றுக்கொடுத்தபோது அவற்றை அம்மக்களிடம் கொண்டுசேர்த்ததிலும், அவற்றின் தொடர்ச்சிகளை கவனிப்பதிலும் காட்டிய அக்கறை மக்களாலும் நினைவில் கொள்ளப்படும். அதன் தொடர்ச்சியாகவே 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகளில் நாம் ஈடுபட்டபோது உடுப்பிட்டித் தொகுதி மக்களினது கோரிக்கைக்கமைய செந்திவேல் தமிழினியன் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். தேர்தல் பிரச்சார காலத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று 23.10.2024 அதிகாலை எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரது இழப்பு எனக்கும், எனது அணியினருக்கும் மட்டுமல்லாது வடமராட்சி மக்களுக்கும் பேரிழப்பாகும். சகோதரனாக, ஊரவனாக, அன்புக்குரிய தோழனாக அவரோடு இணைந்து செயற்பட்ட அனைவரோடும் நாம் இச்சந்தர்ப்பத்தில் துணைநிற்கிறோம். அன்னாரின் இழப்பையடுத்து, இன்றிலிருந்து அன்னாரின் இறுதிச்சடங்குகள் நிறைவடையும் வரை வடமராட்சி பிரதேசத்திற்கான எமது அனைத்து பிரச்சார நடவடிக்கைகளையும் இடைநிறுத்தம் செய்வதோடு, எனது பிரச்சார கூட்டங்களையும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளேன். மீண்டும் இத்துயரத் தருணத்தில் நாம் அனைவரும் அன்னாரின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரோடும் துணைநிற்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement