• Jan 13 2025

கனடாவின் பிரதமர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த அனிதா இந்திரா!

Tharmini / Jan 12th 2025, 4:38 pm
image

கனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா இந்திரா உள்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா, தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அனிதா இந்திரா கூறும்போது, பிரதமர் பதவிப் போட்டியிலிருந்து விலகியுள்ளேன். மேலும் நாடாளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப்போவதில்லை.

தனக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி. என்னை நாடாளுமன்ற உறுப்பினராகிய ஓக்வில்லி தொகுதி மக்களுக்கு உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன்.

கல்வித்துறைக்குத் திரும்புவதன் மூலம் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க உள்ளேன் என்றார். 

கனடாவின் பிரதமர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த அனிதா இந்திரா கனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா இந்திரா உள்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர்.இந்நிலையில், கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா, தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அனிதா இந்திரா கூறும்போது, பிரதமர் பதவிப் போட்டியிலிருந்து விலகியுள்ளேன். மேலும் நாடாளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப்போவதில்லை.தனக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி. என்னை நாடாளுமன்ற உறுப்பினராகிய ஓக்வில்லி தொகுதி மக்களுக்கு உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன்.கல்வித்துறைக்குத் திரும்புவதன் மூலம் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க உள்ளேன் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement