சிவனடிபாத மலை உச்சிக்கு முன்னால் அமைந்துள்ள வனத்தொடர் பகுதியில் இன்று திடீர் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
நிலவும் கடும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ ஏற்பட்டுள்ள பகுதி மிகவும் கடினமான மலை உச்சியில் அமைந்துள்ளதால், தீயணைப்பு குழுவினர் அங்கு செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அரிய வகை விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு இதனால் கடும் அழிவு ஏற்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தீயை அணைக்க நல்லதண்ணி பொலிசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிவனடிபாதமலை வனப்பகுதியில் திடீர் தீப்பரவல் சிவனடிபாத மலை உச்சிக்கு முன்னால் அமைந்துள்ள வனத்தொடர் பகுதியில் இன்று திடீர் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. நிலவும் கடும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.தீ ஏற்பட்டுள்ள பகுதி மிகவும் கடினமான மலை உச்சியில் அமைந்துள்ளதால், தீயணைப்பு குழுவினர் அங்கு செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அரிய வகை விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு இதனால் கடும் அழிவு ஏற்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தீயை அணைக்க நல்லதண்ணி பொலிசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.