• Nov 24 2024

சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதை துரிதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சரிடம் அங்கஜன் கோரிக்கை...!samugammedia

Sharmi / Jan 30th 2024, 4:03 pm
image

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதை துரிதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவுறுத்தல்கள் தூதரக அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருடகாலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களை இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 2022ம் ஆண்டு விடுதலை செய்திருந்த நிலையில் அவர்களில் சாந்தன், இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தார். 

இருந்தபோதும், கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணங்கள் இன்மையால்  திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதியுறும் அவர் தற்போது சென்னையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும், 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகனை காணாத  77 வயதான அவரது தாயாரின் கோரிக்கையை கருத்தில் கொண்டும் சாந்தனை நாட்டுக்கு மீள அழைத்து வரவேண்டியதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட வேண்டியுள்ளது. 

எமது நாட்டின் மனிதாபிமான பண்பை வெளிப்படுத்தும் வகையில் இவ்விடயத்தில் வெளிவிவகார அமைச்சு உடனடி கவனமெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி அவர்களுக்கும், வெளிவிவகார பிரதி அமைச்சர் தாரக பாலசூரிய அவர்களுக்கும் கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன். 

மேலும், அமைச்சர் அலிசப்ரி அவர்களுடன் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியிலும் உரையாடியுள்ளேன். தற்போது இவ்விடயம் தொடர்பிலான அறிவுறுத்தல்கள் தூதரக அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதை துரிதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சரிடம் அங்கஜன் கோரிக்கை.samugammedia இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதை துரிதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.இதற்கான அறிவுறுத்தல்கள் தூதரக அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருடகாலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களை இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 2022ம் ஆண்டு விடுதலை செய்திருந்த நிலையில் அவர்களில் சாந்தன், இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தார். இருந்தபோதும், கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணங்கள் இன்மையால்  திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதியுறும் அவர் தற்போது சென்னையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும், 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகனை காணாத  77 வயதான அவரது தாயாரின் கோரிக்கையை கருத்தில் கொண்டும் சாந்தனை நாட்டுக்கு மீள அழைத்து வரவேண்டியதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட வேண்டியுள்ளது. எமது நாட்டின் மனிதாபிமான பண்பை வெளிப்படுத்தும் வகையில் இவ்விடயத்தில் வெளிவிவகார அமைச்சு உடனடி கவனமெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி அவர்களுக்கும், வெளிவிவகார பிரதி அமைச்சர் தாரக பாலசூரிய அவர்களுக்கும் கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன். மேலும், அமைச்சர் அலிசப்ரி அவர்களுடன் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியிலும் உரையாடியுள்ளேன். தற்போது இவ்விடயம் தொடர்பிலான அறிவுறுத்தல்கள் தூதரக அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement