• May 17 2024

அந்நூர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு நடைபவணி samugammedia

Chithra / Jul 23rd 2023, 5:33 pm
image

Advertisement

வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணி  இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வர் ஏ.எம்.எம்.தாஹிரின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.நவாஸ், வாழைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி எம்.ஐ.எஸ்.முகம்மட், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவணி வை.எம்.எம்.ஏ. வீதி, ஹைராத் வீதி, ஓட்டமாவடி தபாலக வீதி, ஓட்டமாவடி – கொழும்பு பிரதான வீதி, மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி, ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி வழியாக மீண்டும் வாழைச்சேனை அந் நூர் தேசிய கல்லூரியை வந்தடைந்தது.

இன்றைய நாள் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டாக வாகன தொடர் அணியுடன் கலந்து கொண்டதுடன் வீதியோரங்களில் நின்ற சிறுவர்களுக்கு இனிப்புக்கள் வழங்கி தங்களது சந்தோசத்தினை வெளிப்படுத்தினர்.

வாழைச்சேனை அந் நூர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு இடம் பெற்ற நடைபவணி பிரதேசத்தின் கொண்டாட்டமாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அந்நூர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு நடைபவணி samugammedia வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணி  இடம்பெற்றது.கல்லூரியின் முதல்வர் ஏ.எம்.எம்.தாஹிரின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.நவாஸ், வாழைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி எம்.ஐ.எஸ்.முகம்மட், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவணி வை.எம்.எம்.ஏ. வீதி, ஹைராத் வீதி, ஓட்டமாவடி தபாலக வீதி, ஓட்டமாவடி – கொழும்பு பிரதான வீதி, மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி, ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி வழியாக மீண்டும் வாழைச்சேனை அந் நூர் தேசிய கல்லூரியை வந்தடைந்தது.இன்றைய நாள் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டாக வாகன தொடர் அணியுடன் கலந்து கொண்டதுடன் வீதியோரங்களில் நின்ற சிறுவர்களுக்கு இனிப்புக்கள் வழங்கி தங்களது சந்தோசத்தினை வெளிப்படுத்தினர்.வாழைச்சேனை அந் நூர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு இடம் பெற்ற நடைபவணி பிரதேசத்தின் கொண்டாட்டமாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement