• Oct 01 2026

ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் குறித்த அறிவிப்பு

Chithra / Sep 30th 2026, 1:29 pm
image


ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று (30) இரவு வெளியிடப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.


இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், 


எரிபொருள் விலை திருத்தம் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.


இதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான புதிய எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.


இதனிடையே, எதிர்வரும் விலை திருத்தத்தின் ஒரு பகுதியாக டீசலுக்கு ஒரு லீட்டருக்கு 70 ரூபாய் மானியம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நிறுவனங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், டீசல் விற்பனையில் ஏற்படும் நட்டம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுவதாகவும், ஒரு லீட்டருக்கு சுமார் 120 ரூபாய் முதல் 247 ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், டீசலுக்கு அரசாங்கம் வழங்கும் மானியத்தால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) பெரும் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் CPC நட்டமின்றி செயல்படும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், டீசலுக்கு வழங்கப்படும் மானியம் பெட்ரோலுக்கு வழங்கப்படாது எனவும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் குறித்த அறிவிப்பு ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று (30) இரவு வெளியிடப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், எரிபொருள் விலை திருத்தம் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.இதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான புதிய எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.இதனிடையே, எதிர்வரும் விலை திருத்தத்தின் ஒரு பகுதியாக டீசலுக்கு ஒரு லீட்டருக்கு 70 ரூபாய் மானியம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.நிறுவனங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், டீசல் விற்பனையில் ஏற்படும் நட்டம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுவதாகவும், ஒரு லீட்டருக்கு சுமார் 120 ரூபாய் முதல் 247 ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், டீசலுக்கு அரசாங்கம் வழங்கும் மானியத்தால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) பெரும் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் CPC நட்டமின்றி செயல்படும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், டீசலுக்கு வழங்கப்படும் மானியம் பெட்ரோலுக்கு வழங்கப்படாது எனவும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement