• Apr 28 2025

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு...!

Sharmi / Jun 1st 2024, 2:19 pm
image

டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது  என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் டீசலின் விலை 307 ரூபாவை எட்டினால் மட்டுமே பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் எரிபொருள் விலை 4 வீதத்தால் குறைக்கப்பட்டால் மட்டுமே கட்டணத்தை குறைக்க முடியும் எனவும், இம்முறை எரிபொருள் விலை குறைப்பு வீதம் 2.8 வீதமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை  317 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு. டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது  என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஒரு லீற்றர் டீசலின் விலை 307 ரூபாவை எட்டினால் மட்டுமே பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் எரிபொருள் விலை 4 வீதத்தால் குறைக்கப்பட்டால் மட்டுமே கட்டணத்தை குறைக்க முடியும் எனவும், இம்முறை எரிபொருள் விலை குறைப்பு வீதம் 2.8 வீதமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.நேற்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை  317 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now