• Sep 17 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்தா தலைமையகத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு சஜித் தரப்பு போர்க்கொடி...!

Sharmi / Jun 1st 2024, 2:54 pm
image

Advertisement

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா அலுவலகத்தை தம்மிடம்  ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவிக்கையில்,

'சிறிகொத்தவை எங்களிடம் ஒப்படைத்தால் நல்லது, அது எமக்கே சொந்தம், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் மீது அன்பு இருந்தால் முன்னாள் தலைவர்களை மதித்திருந்தால், சரியான அன்பு இருந்தால், சிறிகொத்தவையும் ஐக்கிய தேசிய கட்சியினையும் எங்களிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை செய்வதன் மூலமாக அவருடைய பாவங்களை நாம் மன்னிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அத்தகைய ஞானமும் மனசாட்சியும் கடைசி நேரத்தில் வெளிப்படும் என்று நம்புகிறேன். நாங்கள் சிறிகொத்தவை மிகவும் நேசித்தோம். எங்கள் இடம் சிறிகொத்த. நான் சிறிகொத்தாவில் இருந்து மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டேன்.

எனவே, அரசியல் ரீதியாக அப்போது சிறிகொத்தவுடன் இணைந்து செயற்பட்டோம். ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற முடியாத காரணத்தினாலேயே இந்தக் கட்சியை உருவாக்கினோம் எனவும் தெரிவித்தார்.




ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்தா தலைமையகத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு சஜித் தரப்பு போர்க்கொடி. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா அலுவலகத்தை தம்மிடம்  ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவிக்கையில்,'சிறிகொத்தவை எங்களிடம் ஒப்படைத்தால் நல்லது, அது எமக்கே சொந்தம், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் மீது அன்பு இருந்தால் முன்னாள் தலைவர்களை மதித்திருந்தால், சரியான அன்பு இருந்தால், சிறிகொத்தவையும் ஐக்கிய தேசிய கட்சியினையும் எங்களிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.இதனை செய்வதன் மூலமாக அவருடைய பாவங்களை நாம் மன்னிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.அத்தகைய ஞானமும் மனசாட்சியும் கடைசி நேரத்தில் வெளிப்படும் என்று நம்புகிறேன். நாங்கள் சிறிகொத்தவை மிகவும் நேசித்தோம். எங்கள் இடம் சிறிகொத்த. நான் சிறிகொத்தாவில் இருந்து மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டேன்.எனவே, அரசியல் ரீதியாக அப்போது சிறிகொத்தவுடன் இணைந்து செயற்பட்டோம். ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற முடியாத காரணத்தினாலேயே இந்தக் கட்சியை உருவாக்கினோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement