• Apr 15 2025

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Apr 13th 2025, 3:04 pm
image

  

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக 20ஆம் திகதிக்கு பின்னரே பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சுமார் 331,185 பரீட்சார்த்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு   கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.எவ்வாறாயினும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக 20ஆம் திகதிக்கு பின்னரே பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.இதேவேளை சுமார் 331,185 பரீட்சார்த்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement